கேரவேனில் இந்த நடிகர் எப்போதுமே 10 பெண்களுடன் ஜாலியா இருப்பார்.. சாரப்பாம்பு சுப்புராஜ் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக அரசியல் பேசும் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன்.

பெரும்பாலும் மணிவண்ணன் உலக அரசியல் வரை அனைத்து விதமான அரசியலையும் தெரிந்து வைத்திருப்பவர். தொடர்ந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்தவர் என்று கூறலாம்.

அதே போல அரசியலில் பல பிரபலங்களை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூட மணிவண்ணன் கூறியிருக்கிறார். 1980 ஆம் ஆண்டு வந்த நிழல்கள் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக முதன்முதலாக அறிமுகமானார் மணிவண்ணன்.

 

ஆரம்பத்தில் மணிவண்ணன் படங்களுக்கான வசனங்களை எழுதுவது, கதைகளை எழுதுவது போன்றவற்றைதான் முக்கிய பணியாக செய்து வந்தார். அந்த வகையில் அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை, காதல் ஓவியம் போன்ற திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதி இருக்கிறார் மணிவண்ணன்.

---- Advertisement ----

மணிவண்ணன் எண்ட்ரி:

முதன்முதலாக இவர் இயக்கிய திரைப்படம் கோபுரங்கள் சாய்வதில்லை.  இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக மோகன் நடித்திருந்தார் முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து ஜோதி, இளமை காலங்கள் போன்ற திரைப்படங்களை இயக்கி வந்தார் மணிவண்ணன். நடிகர் சத்யராஜுடன் மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்கள் யாவும் பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. அவற்றில் அமைதிப்படை முக்கியமான திரைப்படம் ஆகும்.

மணிவண்ணனின் அரசியல் அறிவை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் அமைதிப்படை திரைப்படம் சத்யராஜுக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்திருந்தது.

நடிகராக வெற்றி:

அதே சமயத்தில்  ஒரு நடிகராகவும் அதிக வெற்றியை பெற்றவராக மணிவண்ணன் இருந்து வருகிறார். 400க்கும் அதிகமான திரைப்படங்களில் இதுவரை மணிவண்ணன் நடித்திருக்கிறார். எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்தாலும் அதில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக இருந்த காரணத்தினால் நடிகராகவும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் மணிவண்ணன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார் நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ். இவர் வடிவேலுவுடன் நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பிறகு ஒரு லெவலுக்கு அப்புறம் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் போனது.

கேரவனில் நடந்த சம்பவம்:

மேலும் பேட்டிகளில் வடிவேலுவை அதிகமாக விமர்சித்தும் பேசியிருக்கிறார் சாரப்பாம்பு சுப்புராஜ். இந்த நிலையில் மணிவண்ணனுடன் அவர் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் கூறும் பொழுது தமிழ் சினிமாவிலேயே முதன் முதலில் கேரவன் வாங்கியவர் மணிவண்ணன் தான்.

மணிவண்ணனுக்கு பிறகு நடிகர் ரகுவரன் சினிமாவில் கேரவன் வாங்கினார் .எப்போது பார்த்தாலும் மணிவண்ணன் அவரது கேரவனில் 10 பெண்களுடன் தான் இருப்பார். எப்போதும் ஜாலியாக இருக்கக் கூடியவர், பெரிதாக எதற்கும் கவலைப்பட மாட்டார். படப்பிடிப்புகளுக்கு வரும்பொழுது கூட அங்கு சிரிப்பு வரும் வகையில் இரட்டை அர்த்தம் கொண்ட காமெடிகளை சொல்லிக் கொண்டிருப்பார் மணிவண்ணன் என்று கூறுகிறார் சாரப்பாம்பு சுப்புராஜ் .

---- Advertisement ----