Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

Sarath Babu Asset Details : மறைந்த நடிகர் சரத்பாபு-வின் சொத்து மதிப்பு தெரியுமா..? – அதிர வைக்கும் தகவல்கள்..!

Sarath Babu Asset Details : பிரபல நடிகர் சரத்பாபு சற்று முன்பு மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி ரசிகருடைய அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடத்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்பொழுது மரணம் அடைந்திருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் 1973 ஆம் ஆண்டு வெளியான ராமராஜ்யம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் சரத்பாபு அதன் பிறகு தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தன்னுடைய முதல் இரண்டு திரைப்படங்களிலேயே தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்றார் குறிப்பாக தமிழில் முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

sarath babu

sarath babu

அதன் பிறகு ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருடைய திரை வாழ்க்கையின் ஒரு மைல் கல் என்று கூறலாம் பட்டி தொட்டி இருந்தும் ஹிட்டடித்த இந்த அண்ணாமலை திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நண்பனாக நடித்திருந்தார் நடிகர் சரத்பாபு.

பார்ப்பதற்கு ஹீரோ போல இருந்தாலும் கூட தனக்கு ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் இல்லை என பல்வேறு பேட்டிகளில் பதிவு செய்திருக்கிறார். மேலும் நான் நடிக்க கூடிய கதாபாத்திரத்தை என்னை விட்டால் யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்ற ஒரு சிறு கர்வம் எனக்குள் இருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்.

sarath babu

sarath babu

தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நான் இருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் வயது மூப்பின் காரணமாக சினிமாவில் இருந்து விலகினார்.

கடைசியாக வசந்த முல்லை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் திடீரென உடல்நல குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

sarath babu

sarath babu

இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனளிக்காமல் மறைந்திருக்கிறார். இவருடைய உயிரிழப்புக்கு திரைத்துறையினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சரத்பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி இவருடைய மொத்த சொத்து மதிப்பு இரண்டு கோடி அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 160 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

sarath babu

sarath babu

இரண்டே படங்களில் 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் 400 படங்களில் நடித்தும் 160 கோடி ரூபாய் சொத்து தான் சரத்பாபு சேர்த்து வைத்துள்ளார்.. சினிமாவில் இவ்வளவு காலங்கள் கடந்து விட்டாலும் கூட இவ்வளவுதான் சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரா..? என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

மேலும் ஹைதராபாத்தில் உள்ள இவரது உடல் சென்னையில் டி நகர் இருக்கும் இவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. சென்னையில் தான் இவருடைய இறுதி சடங்குகள் நடக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading

Top 5 Posts Today

To Top