இந்த படத்தில் காமெடி நடிகருக்கும், ஹீரோ சரத்குமாருக்கும் ஒரே சம்பளமாம்… அட இப்படி கூட நடக்குமா?

விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தில், வில்லன் நடிகராக அறிமுகமானவர் சரத்குமார். அதன்பின் சேரன் பாண்டியன், சாமுண்டி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார் சரத்குமார்.

அதற்கு பிறகு, 1994ல் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை படத்தில் நடித்த சரத்குமார், முன்னணி நாயகனாக உயர்ந்தார். அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில், இன்று வரை நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ஆனால், ஏறக்குறைய 29 ஆண்டுகள் ஆன நிலையில், நாட்டாமை படம், இன்றும் ரசிகர்களால், விரும்பி ரசிக்கப்படுகிறது. இப்போதும் டிவி சேனல்களில் அந்த படம் ஒளிபரப்பாகும் போது, டிஆர்பி ரேட் எகிறி விடுகிறது.

அதற்கு பல காரணங்கள் இருந்தால், அதில் ஒரு முக்கிய காரணம், படத்தில் நடித்த கவுண்டமணி – செந்தில் காமெடி காட்சிகளும்தான்.
இந்த படத்தின் பட்ஜெட்டாக திட்டமிட்டது 50 லட்சம் ரூபாய் மட்டும்தானாம். லோ பட்ஜெட் படமான இதில், நடிகை குஷ்பு நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது நடிகை லட்சுமியை தான். ( இந்த வாய்ப்பு தரப்படாததால்தான், அடுத்து சில ஆண்டுகளில் வந்த ‘படையப்பா’ படத்தில் ரஜினி அம்மாவாக லட்சுமி நடித்தார்)

ஆனால், படத்தின் கதையை கேட்ட குஷ்பு, லட்சுமி நடிக்க வேண்டிய கேரக்டரில் தானே நடிப்பதாக ஒத்துக்கொண்டாராம், அதுபோல், மீனா கேரக்டர் முதலில், இல்லையாம், ஆனால், அந்த கேரக்டரில் மீனா நடிக்க வேண்டும் என, நடிகர் விஜயகுமார் கேட்டுக்கொண்டதால்தான், மீனாவுக்கு நாட்டாமை படத்தில் நடிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், படத்தின் நாயகன் சரத்குமாருக்கும், கவுண்டமணிக்கும் இந்த படத்தில் ஒரே சம்பளம், அதாவது இருவருக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் தரப்பட்டுள்ளது, மீதம் 40 லட்சம் ரூபாயை வைத்துதான், படத்தில் நடித்த மற்றவர்களுக்கு சம்பளம், படப்பிடிப்பு காட்சிகளும், படததின் தொழில்நுட்ப பணிகளும் நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த படம், பல கோடி ரூபாய்களை வசூலில் அள்ளியதோடு, இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறறுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----

---- Advertisement ----