“சித்திரை மாத அமாவாசை..!- சதுரகிரிக்கு சிறப்பு அனுமதி..!

இந்து மதத்தில் சிறப்புமிக்க அமாவாசைகளில் ஒன்றாக சித்தரை மாதத்தில் ஏற்படும் அமாவாசை கருதப்படுகிறது. இந்த சமயத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கும் சுந்தரம் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

இந்தக் கோயிலில் இருக்கும் சிவனை தரிசிக்க பிரதோஷம் மற்றும் பௌர்ணமி காலங்களில் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கமான ஒன்றுதான். எனினும் தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்குச் செல்ல மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

sathuragiri sivan

அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசை வருவதால் பக்தர்கள் இருபதாம் தேதி வரை மலை கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி தந்துள்ளது.

மேலும் பகல் நேரத்தில் மட்டுமே மலை ஏற வேண்டும் என்ற அறிவுரையை தந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் மலைகளில் தங்க அனுமதி இல்லை எனவும் அருவிகளிலோ ஊற்றுக்களிலோ குடிக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

எனினும் அற்புத ஆற்றல் படைத்த இந்த சுந்திர மகாலிங்க சுவாமி தரிசிக்க எண்ணற்ற சிவபக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.

---- Advertisement ----

sathuragiri sivan

சதுரகிரி மலைக்குச் சென்று அங்கிருக்கும் சுவாமியை தரிசிப்பது மிகவும் கடினமான செயல் என்பதோடு, மட்டுமல்லாமல் வழியில் ஏராளமான அனுபவங்களையும் சந்திக்க தயாராகிக் கொள்ள வேண்டும்.

இந்த மலைக்கு செல்ல உடல் வலிமையோடு மட்டுமல்லாமல், மன வலிமை நிறைந்தவர்கள் மட்டுமே சுந்தர மகாலிங்கேஸ்வரரை தரிசிக்க முடியும்.

மேலும் மலை ஏறி ஈசனை தரிசிக்க செல்பவர்களின் மனதில் மட்டுமல்லாமல் அவர்கள் செல்லும் பாதையில் சித்தர்கள் பலரும் இருப்பதாகவும் அங்கிருக்கும் மூலிகை காற்று மூச்சில் கலந்து விட்டால் இருக்கின்ற நோய்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்றும் கூறுகிறார்கள்.

sathuragiri sivan

இந்த நாளில் கட்டாயம் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை சதுரகிரியில் இருக்கும் சுந்தர மகாலிங்கேஸ்வர சுவாமிகள் தருவார் என்ற நம்பிக்கை இன்றளவும் பக்தர்கள் மத்தியில் நிலைத்து இருப்பதால் கட்டாயம் வனத்துறை அறிவுத்திருக்கும் அறிவிப்பையும் மதித்த வண்ணம் சதுரகிரிக்கு சென்று சுவாமியின் அருளைப் பெறுவார்கள் என்று நம்பலாம்.

எனவே நீங்களும் சதுரகிரி மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. ஈசன் அருள் இருந்தால் நிச்சயம் சுந்தர மகாலிங்கேஸ்வரரை கட்டாயம் தரிசனம் செய்யலாம்.

---- Advertisement ----