என்னாச்சு சத்யராஜுக்கு யாரை தாக்கி பேசி இருக்காரு … இந்த திடீர் ஞானோதயத்திற்கு காரணம் என்ன?

அந்தக் காலத்தில் வில்லன் வேடங்களை ஏற்று நடித்து வந்த சத்தியராஜ் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இவரின் சிறப்பான நடிப்பிற்கு வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தை கூறலாம்.

இவர் சிறந்த குணசித்திர நடிகராக தமிழ், தெலுங்கு மற்றும் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். யாருக்கும் பயந்து கொள்ளாமல் தன்னுடைய கருத்துக்களை மிக நேர்த்தியான முறையில் வெளியிடுவதில் இவர் வல்லவர். அத்தகைய கருத்துக்களை பிறர்  ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் இது சரி என்று வாதிடக் கூடிய தன்மையில் இருப்பவரும் அல்ல.

 தற்போது இவர் பேசிய ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்னவென்றால் குறிப்பாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரின் திரைப்படம் வெளி வந்தால் மிகவும் ஆரவாரமாக கொண்டாடுவார்கள்.

அதுவே திரை உலகில்  சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நடிகர்களுக்கு என்றால் மிகவும் வெறித்தனமாக ரசிகர்கள் அவர்களை ஃபாலோ செய்வார்கள்.

எனவே ரசிகர்கள் குறிப்பாக ஒன்றை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது நடிகன் என்பவன் கேமரா முன்னால் ஆக்ஷன் என்று கூறினால் நடித்த தெரியுமே ஒழிய அவனுக்கு வேறு எதுவும் தெரியாது.எனவே யாரையும் நீங்கள் தனிமனித வழிபாடு செய்து தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டாம்.

நாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக தான் நடிக்கிறோம். நீங்கள் எங்களுக்கு சோறு போடும் தெய்வங்கள்.எனவே சோற்றை மட்டும் நீங்கள் போட்டால் போதும். வேறு எதையும் நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டாம். இந்தப் பேச்சுதான் தற்போது பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது. திடீரென்று இந்த ஞான உதயத்திற்கு காரணம் என்ன? இவர் குறிப்பாக ரஜினியை தான் குத்தி பேசுகிறாரா? என்று ரசிகர்கள் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். எனினும் இதுவரை மறைமுகமாக யாரையும் தாக்கிப் பேசாத சத்யராஜ் இந்த முறை எதை மனதில் வைத்து இப்படி பேசியிருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இந்த ரசிகர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க சத்யராஜ் ஏதாவது கூறுவாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …