90களில் பிரபல நடிகையாக இருந்த நடிகை சீதா தன்னுடன் நடித்த நடிகர் பார்த்திபனை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர் குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் பார்த்திபனை ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்த நடிகை சீதா அதன்பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
சீரியலில் நடிக்கும் போது தன்னுடைய நடித்த சக நடிகர் சதீஷ் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவருடைய இரண்டாவது திருமணம் தோல்வியில் முடிந்தது. தன்னுடைய இரண்டாவது கணவர் சதீஷ்-ஐயும் பிரிந்த நடிகை சீதா தற்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.
பொழுதுபோக்கிற்காக தன்னுடைய வீட்டில் தோட்டம் ஒன்றையும் வைத்திருக்கிறார். அந்த வகையில் சக்கரவள்ளி கிழங்கு ஒன்றை தன்னுடைய தோட்டத்தில் நடவு செய்திருக்கிறார்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக அதனை பராமரித்து வந்திருக்கிறார் நடிகை சீதா. ஆனால் தோண்டி பார்த்தபோதுதான் உண்மை தெரிய வந்திருக்கிறது.
நடிகை சீதா இந்த சக்கரவள்ளி கிழங்கு இருந்து நான்கு கிழங்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்தாராம். ஆனால் இரண்டு கிழங்குகள் தான் வந்திருக்கின்றன.
நான் நான்கு கிழங்குகள் கிடைக்கும் எதிர்பார்த்தேனே. ரெண்டே ரெண்டு தான் வந்திருக்கிறது.இதனுடைய இலைகள் அனைத்தும் அழகாக இருக்கிறது என இலைகளை நன்றாக வளரவிட்டேன். ஆனால், இலை அதிகமாகி கிழங்கு கம்மி ஆகி விட்டது என கூறியுள்ளார்.
View this post on Instagram
என் வாழ்க்கையில் கடைசியா நீயும் என்ன ஏமாத்திட்டியே டா.. என்று சக்கரவள்ளி கிழங்கிடம் புலம்பியபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.