Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

கிராமத்து வாழ்க்கையை என்ஜாய் பண்ணும் நடிகை சீதா..! – வைரல் போட்டோஸ்..!

இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் என்ற திரைப்படத்தில் 1985 ஆம் ஆண்டு நடிகையாக களம் கண்டவர் தான் சீதா [Seetha]. இவர் தனது முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை எடுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

மேலும் சினிமாவில் முன்னணி கதாநாயகராக திகழ்ந்த ரஜினி, கமல், அர்ஜுன் உள்ளிட்ட ரோடு இணைந்து நடித்திருக்கும் இவர் ரஜினியுடன் குரு சிஷ்யன் படத்திலும் கமலஹாசன் உடன் உன்னால் முடியும் தம்பி என்ற படத்திலும் நடித்து அசத்தியிருப்பார். இந்த இரண்டு படங்களுமே இவரது கேரியரில் மிகவும் முக்கியமான படங்களாக உள்ளது.

Seetha

Seetha

மேலும் இவர் அர்ஜுனன் இணைந்து நடித்த சங்கர் குரு படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து இயக்குனர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது காதல் புதிய பாதை என்ற படத்தில் நடித்த போது ஏற்பட்டது.

இதனை அடுத்து தான் காதலித்த பார்த்திபனை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காத இவர் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார்.

Seetha

Seetha

இதனை அடுத்து தற்போது இவர் சின்ன திரையில் அம்மா, சித்தி என்று பல சின்ன சின்ன வேடங்களில் நடித்து அசத்தி வருவதோடு பலமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.மேலும் வலைதள பக்கங்களில் வரும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர்ஃபுல்லான போட்டோஸை போட்டு அசத்தி இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் இவர் வீட்டு மாடி தோட்டத்தில் காய்கறிகளை பறிப்பது போன்று இருக்கக்கூடிய வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தோட்டம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தி விடுவார்.

Seetha

Seetha

தற்போது இவர் கிராமத்து பின்னணியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஆச்சரியங்களை ஏற்படுத்தி விட்டார்.

இவனை அடுத்து இந்த புகைப்படங்களை பார்க்கும் போது நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கை எவ்வளவு சூப்பரானது என்பதை சொல்லாமல் இவர் புரிய வைத்துவிட்டார் என்பதை இங்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

Continue Reading

Top 5 Posts Today

To Top