இந்த வயசுலயும் இப்படியா..? – கவர்ச்சி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை சீதா..! – வைரல் பிக்ஸ்..!

ஒரு காலத்தில் நடிகை சீதா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 80களில் பலராலும் அறியப்பட்ட நடிகையாக இருந்த நடிகை சீதா ஆண்பாவம், குருசிஷ்யன், ராஜநடை உள்ளிட்ட பல ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு தன்னுடைய நாட்களை பிசியாக வைத்திருந்தவர் நடிகை சீதா. ஆனாலும், கவர்ச்சியாக நடிக்க மறுத்து வந்தார். பல படங்களில் இதனால் நடிக்காமல் தவிர்த்திருக்கிறார்.

நடிகை சீதாவின் சினிமா வாழ்க்கை குழம்பிய குட்டை ஆனதற்கு காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான் என்று கூறப்படுகிறது. ஆண்பாவம் படத்திற்கு பின்னர் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகை சீதா.

அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல்.. திருமணம் வரை சென்றது. சீதாவின் வீட்டில் இந்த திருமணத்தையும் பார்த்திபன் காதலையும் ஏற்றுக்கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனை கடந்த 1989ஆம் ஆண்டு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் நடிகை சீதா.

திருமணத்திற்கு பின் சீதா சினிமாவில் நடிப்பதில் பார்த்திபனுக்கு உடன்பாடு இல்லை என கூறப்பட்டது. இதனால் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை சினிமாவில் இருந்து நீண்ட தூரம் பிரிந்து சென்றார்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் சினிமாவில் அவர் நடிக்கவில்லை. பார்த்திபனுடன் 2 மகள்களை பெற்ற நடிகை சீதா அவருக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் ஒரு மகனைத் தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

ஆனால் பத்து வருடங்கள் கழித்து தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு மீண்டும் நடிக்கத் துவங்கினார்.

வயதாகி விட்ட காரணத்தினால் சீதாவுக்கு படத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்படி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை கஷ்டப்பட்டு துவங்கிய நடிகை சீதா ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது சீரியல் நடிகர் சதீஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்ந்து வந்தார். முறைப்படி திருமணம் செய்து கொண்டு இருவரும் குடும்பம் நடத்தினார்கள்.

ஆனால் நடிகை சீதாவுக்கு இந்த திருமணமும் சரியானதாக அமையவில்லை. ஆறு ஆண்டுகள் சதீஷுடன் குடும்பம் நடத்தி வந்த நடிகை சீதா அவரையும் விவாகரத்து செய்தார்.

இப்படி தன்னுடைய திருமண வாழ்க்கை சோகமாகவே முடிந்துவிட.. நடிகை சீதா தற்போது தன்னுடைய தாயுடன் வசித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்த இவர் மிகப் பெரிய வசதி படைத்தவர் கிடையாது.

பணத்தை எதிர்பார்த்து போகக்கூடிய குணமும் என்னிடம் இல்லை. சினிமாவில் போதும் போதும் எனும் அளவுக்கு பணம் சம்பாதித்தேன். ஒரு சாதாரண பெண் கணவனிடம் எதிர்பார்க்கும் எல்லா விஷயத்தையும் எதிர்பார்த்திருக்கிறேன் என்று கூறினார்.

இந்நிலையில் சீரியலில் நடித்து வரும் நடிகை சீதா அவ்வப்போதைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்தவகையில், தற்போது வெளியிட்டு இருக்க கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிழந்து வருகின்றனர்.