சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவா இது..?

இப்போதெல்லாம் சீரியல் நடிகைகளே திரைப்பட நடிகைகள் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விடுகிறார்கள் .அவர்களுக்கான ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர் உருவாகிவிடுகிறார்கள் .

இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விடுவதால், தினந்தோறும் தொலைக்காட்சியில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருவதால் மக்களுக்கு மிகவும் நெருக்கமான சீரியல் நடிகையாகி விடுகிறார்கள் .

அப்படித்தான் கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்ட சுருதி ஷண்முகப்பிரியா நாதஸ்வரம், பாரதிகண்ணம்மா, வாணி ராணி, கல்யாண பரிசு, மற்றும் பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல பிரபலமான சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா:

குறிப்பாக இவர் நாதஸ்வரம் சீரியலில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் .

தொடர்ச்சியாக இவருக்கு அடுத்தடுத்த சீரியல்களின் வாய்ப்புகளை கிடைத்துக்கொண்டே இருந்தது. இதனிடையே சண்முகப்பிரியா கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை சேர்ந்த பிட்னஸ் மாடலான அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி மிகவும் சுறுசுறுப்பான ஜோடியாக சமூக வலைதளங்களில் அப்போது ரீல்ஸ் மற்றும் ரொமாண்டிக் புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தன .

கணவர் திடீர் மரணம்:

ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை திருமணமாகி ஒரு வருடத்திலேயே அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்துவிட்டார் .

அவரது திடீர் மரணம் மனைவி சண்முகப்பிரியாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இதனிடையே கணவர் இல்லாத வாழ்க்கையை அவருடனான நினைவுகளிலேயே வாழ்ந்து வருகிறார் சண்முகப்பிரியா.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனது கணவரை குறித்து பேசும்போது சுருதி ஷண்முகப்பிரியா என்னுடைய கணவரின் உயிர் மட்டும் தான் என்னுடன் இல்லை.

ஆனால் அவருடைய நினைவுகள் என்றென்றும் என்னுடனே இருக்கும். அவருடைய ஆன்மா என்னை சுற்றி மட்டுமே தான் இருந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது .

எனவே அந்த உணர்விலே நான் கடைசி வரை வாழ்ந்து விடுவேன். என்னை சுற்றி இருக்கிறவர்களுக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பது தெரியும்.

குடும்ப குத்து விளக்காக ஷண்முக பிரியா:

எனவே என்னுடைய மனநிலையை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட நான் விரும்பவில்லை என பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடுத்தக்கது.

இப்படியான சமயத்தில் சண்முகப்பிரியா தன் மனதிற்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் .

அந்த வகையில் தற்போது அவர் அவுட்டிங் சென்று க்யூட்டான உடைகள் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் சண்முகப்பிரியாவா இது? நிஜத்தில் இவ்வளவு அழகாக இருக்கிறாரே மாடல் கொஞ்சம் தூக்கலா தான் இருக்கு எனக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

---- Advertisement ----