டிஆர்பி ரேட்டை தட்டி தூக்கிய அலியா மானசாவின் இனியா தொடர்….! மீண்டும் கோலோச்சுவது சன் டிவியா? விஜய் டிவியா?

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் அலியா மானசாவின் இனியா. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தற்போது டிஆர்பி ரேட்டை தன் பங்குக்கு தக்க வைத்துக் கொள்ளக் கூடிய வகையில்  மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்துள்ளது.

மேலும் இந்தத் தொடரில் சஞ்சீவின் மனைவியான அலியா மானசா ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்து பக்காவாக நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

 அம்மா இல்லாத வீட்டில் அக்கா, தங்கை,அப்பா என்று ஒரு பாசப்பிணைப்போடு இந்த தொடர் நகர்ந்து வருகிறது. மேலும் இந்த தொடர் வெளிவரும் அதே நேரத்தில் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற தொடரும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 ஆரம்பத்தில் இந்த கார்த்திகை தீபம் தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்ததின் காரணமாக டிஆர்பிஐ அதிக அளவில் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்து இருந்த எந்த தொடர் தற்போது அதற்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும் கார்த்திகை தீபம் தொடரானது அர்பன் ஏரியாவில் 3.89 என்ற அளவு மட்டுமே டிஆர்பி ரேட்டை தக்க வைத்துள்ளது.

 ஆனால் ஆரம்பத்தில் இருந்து பரபரப்பாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வந்த இனியா தொடரானது அர்பன் மற்றும் ரூரல் என இரண்டு பகுதிகளிலும் சேர்ந்து 8.36 அளவிற்கு டிஆர்பி ரேட்டை  பெற்றுள்ளது.

 ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மற்றொரு தொடர் இந்த இரண்டு தொடர்களை விட அதிக அளவு டிஆர்பி ரேட்டை பெற்று முன் நிலையில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாய் அடைத்து விட்டார்கள்.

 அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற தொடர் தான்  இந்த தொடருக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால் தற்போது இந்த தொடரானது 9.36  என்ற அளவில் டிஆர்பி ரேட்டை பெற்று இருக்கிறது.

 இதனை எடுத்து சீரியல்களில் சிறப்பான டிஆர்பி ரேட்டை பெற்று வந்த சன் டிவியை பின்னுக்கு தள்ளி விஜய் டிவி கோலோச்சி விட்டது என்று கூறலாம்.

இது இப்படி மாறும் என்று யாரும் எண்ணவில்லை என ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை தற்போது கூறி வருகிறார்கள் இதனை அடுத்து அடுத்த வார நிலவரம் எப்படி இருக்கும் என்பது அடுத்த வாரம் தெரிய வரும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“டேய்.. வலிக்குதுடா..”-ன்னு கடைசியா சொன்னார்.. – மனோபாலா-வின் இறுதி நிமிடங்கள்.!

இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் மனோபாலா [Manobala] தமிழ் உள்ளிட்ட …