இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில்.. விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்கள்…!

 

தற்போது டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு திரைப்படங்களை விட அதிகளவு மவுசு உள்ளது. இதை பார்ப்பதற்கு என்றே ஒரு குடும்பமே கூடி இருக்கிறது. டிஆர்பியை பூர்த்தி செய்யும் விதமாக சன் டிவி, விஜய் டிவி ஜீ டிவி என்று அனைத்துத்  விதவிதமான தொடர்களை மக்களுக்காக வழங்கி வருகிறது.

 இந்த வார டிஆர்பியில் அதிக ரேட்டிங் எடுத்த சன்டிவி சீரியல்கள் விஜய் டிவிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் மேலும் தன்னம்பிக்கையோடு வெளிவரவேண்டும் என்ற  கருத்தை உணர்த்திக் கூறும் கயல் தொடர்தான் டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அண்ணன் தங்கை பாசத்தை எடுத்து உணர்த்தும் வானத்தைப்போல இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இரண்டு மனைவிகள் இருந்தால் என்ன ஆகும் எப்படி சமாளிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கற்றுத் தருவதற்காக வருகின்ற சீரியல் சுந்தரி மூன்றாம் இடத்திலும்  அப்பாவுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள இனிமையான அந்த அன்பை வெளிப்படுத்தக்கூடிய கண்ணான கண்ணே நான்காவது இடத்தையும் பெற்றிருப்பதோடு  ரோஜா சீரியலுக்கு ஐந்தாவது இடத்தில் மிக நல்ல ரேட்டிங் கிடைத்துள்ளது.

 விஜய் டிவி யை பொருத்தவரை டாப் 5 இடத்தில் பாக்யலட்சுமி இதுவரை இருந்து வந்தது. தற்போது இது குறைந்ததற்கு காரணம் என்ன என்று பார்க்கும்போது திரைக்கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இது அந்த ரேட்டிங்கை இழந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பாரதிகண்ணம்மா விலும் தீவிரவாதிகளை கொண்டு அமைக்கப்பட்ட சீன்கள் மூலம் சீரியல் சொதப்பி விட்டதன் காரணமாக இது தொடர்ந்து பிடித்து வந்த ரேட்டிங்கில் சற்று தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.

ஒன்பதாவது இடத்தில் ராஜாராணி இரண்டாம் பாகம் அமைந்திருக்கிறது மேலும் 10வது இடத்தை  பாண்டியன் ஸ்டோர் பிடித்துள்ளது முதல் 5 மற்றும் 6 இடங்களைப் பிடித்துள்ள சன் டிவி தற்போது சீரியல் வரிசையில் மகுடம் சூட்டி மகிழ்ந்த விட்டது.

 அடுத்த வாரம் இவற்றுக்கிடையே போட்டிகள் எப்படி இருக்கும் …டிஆர்பி ரேட்டிங் எப்படி மாறும் … என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …