திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை ஷீலா ராஜ்குமார்-ஆ இது..? – வைரல் போட்டோஸ்..!

இயக்குனர் மோகன் சி இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார் சமீபத்திய ஒரு பேட்டியில் அந்த படத்தில் நடித்ததை ஒரு கெட்ட கனவாக நினைப்பதாக பேசியது பெரும் சர்ச்சையானது.

காரணம் அந்த படத்தில் நடிக்கும்போது இந்த கேரக்டரை நான் உள்வாங்கி நடித்து இருந்தேன் கதை முழுதும் கேட்ட பிறகு தான் நடித்தேன் என ஏக வசனம் பேசி இவர் சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார்.

அதன்பிறகு திரௌபதி படத்தின் கதையை என்னிடம் சொல்லவில்லை அந்த படத்தில் நடித்ததை நான் ஒரு கெட்ட கனவாக கருதுகிறேன் என்றெல்லாம் பேசியிருந்தது ரசிகர்களை கொதிப்படையச் செய்தது.

அது எப்படி ஒரு படம் நடித்துவிட்டு அந்த படம் வெளியானபோது ஒரு கருத்தையும் இப்பொழுது வேறு இயக்குனரின் அதாவது அந்த இயக்குனருக்கு எதிரான சிந்தனை கொண்டவர் என்ற ஒரு இயக்குனரின் படத்தில் நடித்துவிட்டு அப்படியே திரௌபதி இயக்குனருக்கு எதிராக தான் நடித்த முதல் படத்திற்கு எதிராக பேசுவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று பேசி வந்தனர்.

மட்டுமில்லாமல் இவர் பேசிய சமீபத்திய வீடியோவையும் இவர் திரௌபதி திரைப்படம் வெளியான போது இவர் பேசிய வீடியோவையும் இணைத்து இணையத்தில் வைரலாக்கினர். நடிகை ஷீலா ராஜ்குமாரின் உண்மை முகத்தை பாருங்கள் என்று வீடியோவை வைரலாக்கினார்கள் ரசிகர்கள்.

நீங்கள் நடித்திருக்கும் புதிய படத்தினுடைய புரமோஷனுக்காக ஏற்கனவே நடித்து முடித்து வெளியான ஒரு திரைப்படத்தில் மீது வன்மத்தை கக்குவது சரியா..? என்று ஷீலா ராஜ்குமாரை பலரும் வீசினார்கள். இதனால் ஷீலா ராஜ்குமாரின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது.

தமிழில் ஆறாது சினம், டூலெட், மனுசங்கடா, அசுரவதம், கும்பலங்கி நைட்ஸ், நம்ம வீட்டுப்பிள்ளை, திரௌபதி, மண்டேலா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஷீலாராஜ்குமார் திரைப்படங்களில் எப்பொழுதும் புடவை சகிதம் ஆகவே தோன்றுவது வாடிக்கை.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்டது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …