போகிற போக்கைப் பார்த்தா… சிவாங்கி அக்காவை கையில புடிக்க முடியாது போல…. இந்த அளப்பறையால ஹீரோயினி வாய்ப்பை இழப்பாங்களா?

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி அடித்த லூட்டிகளை இன்று வரை யாருமே மறக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் பாடி அசத்தி கோமாளி போல்  மாறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

 இவருக்கு அண்ணன் சிவகார்த்திகேயன் மூலம் டான் என்ற படத்திற்கு சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ப்ரமோஷன் கிடைத்தது. நடிப்பை இவருக்கு வரவில்லை என்று ஒரு சாரார் கூறி வந்தபோதிலும் தற்போது இவர் வைகைபுயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன் படத்தில் நடித்து வருகிறார்.

ஓரு சாரார் கூறிய கருத்துப்படி  சிவாங்கி நடித்த நாய் சேகர் ரிட்டர்ன் படப்பிடிப்பிலிருந்து  இவர் நடித்த முக்கியமான சில பகுதிகள் கட் செய்யப்பட்டு விட்டதாம் இதற்கு காரணம் அவருக்கு  நடிப்பே வரவில்லை யாம். ஆனாலும் இவரின் குசும்புக்கும்  அலப்பறை களும் அளவில்லாமல் செட்டில் போய்க் கொண்டு  இருக்கிறது.

 இந்த அம்மணியின் ரசிகர்கள் பலபேர் இவரது காஸ்டியூம் சரியில்லை என்று கூறிய காரணத்தினால்  படப்பிடிப்பின் போது இவருக்கு கொடுக்கப்பட்ட உடை சரியில்லை என்று கூறி படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

 மேலும் தனக்கு மேக்கப் போடுவதற்காக தினமும் 14 ஆயிரம் ரூபாயை  சம்பளமாகக் கொடுத்து ஒரு மேக்கப்மேன் இவர் கூட்டி வந்துள்ளார் இவருக்கான சம்பளத்தை ப்ரொடக்ஷன் நிர்வாகம்தான் கொடுக்க வேண்டி உள்ளது இப்படி வளருவதற்கு முன்பே கடுமையான  கஷ்டங்களைத் தரும் இவர் வளர்ந்த நிலையில் எப்படி பாடு படுத்துவார் என்று அனைவரும் அரசல்புரசலாக பேசி வருகிறார்கள்.

 அதற்கு தகுந்தது போல் தற்போது இவரை வெளிநாட்டு நிகழ்ச்சிக்காக அடித்த கம்பெனியிடம் தனது குடும்பத்தோடு இருக்கும் அனைத்து நபருக்கும் டிக்கெட் போட்டால் தான் வருவேன் என்று அடம் பிடித்து டிக்கெட் போட வைத்து  துபாய் சென்ற சுவடு மறைவதற்கு முன்பே மீண்டும் இவரது ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டார்.

 ரொம்ப ஓவரா ஆடுனா சினி துறையில தாக்குப்பிடிக்க முடியாது என்பது இவருக்குத் தெரியாது போல.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …