பட வாய்ப்புக்காக இப்படியா..? – ஒரே அடியாக இறங்கி அடித்த பிக்பாஸ் ஷிவானி..! – அடக்கொடுமைய..!

பகல் நிலவு என்ற தொடர் மூலம் அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன் ( Shivani Narayanan ), சில தொடர்களில் சின்னச்சின்ன கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.பல தொடர்களில் நடித்தும் கைகொடுக்காத நிலையில், பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக உள்ளே நுழைந்து. மக்களிடம் பெருமளவு பிரபலமானார்.

அதன் பிறகு பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனாக, ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமாக உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதனாலும், தனது திறமையாலும் தற்போது பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை ஷிவானி நாராயணன். விக்ரம் படத்தில் மட்டும் இல்லாமல் இயக்குனர் பொன்ராம் இயக்கத்திலும், நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி யின் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஷிவானி.

இந்நிலையில்,நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கம்பேக் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் நாய் சேகர் திரைப்படத்தில் ஷிவானி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

படம் முழுக்க கவர்ச்சி..

இதில் ஷிவானி மிகவும் கவர்ச்சியான வேடத்தில் திரைப்படம் முழுவதும் வருகிறார் என்பதைப் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வடிவேலுவின் கம் பேக் பற்றி பெரிதாக யாரும் கூறவில்லை என்பதும்வடிவேலுவின் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில் திடீரென்று ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று கேட்டதற்கு ஷிவானி நாராயணன் தரப்பில் தற்போது தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைக்கான இடம் காலியாக இருக்கிறது அந்த இடத்தை ஷிவானி நிரப்புவார் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி வடிவேலு கம்பேக் என்ற படத்தை பார்க்கிறார்களோ இல்லையோ ஷிவானியின் கவர்ச்சிக்காகவே படத்திற்கு ரசிகர்கள் வருவார்கள் என்றும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …