அசர வைக்கும் படம் … கார்த்திக், நியாஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் – “ஷூ”!

கார்த்திக் மற்றும் நியாஸ்  தயாரிப்பில் வெளிவரக்கூடிய இந்த படமானது கீழ் உள்ள பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு விடையாக நமக்கு அமையும். அப்படி எதை பற்றி இப்படம் கூற வருகிறது… தெரியுமா?

பொதுவாக சமூகத்தில் இன்று பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் பல்கிப் பெருகி வருகிறது. இதனைப் பல்வேறு விதமாக ஊடகங்கள் சித்தரித்து வந்த போதிலும் அதை தடுப்பதற்கான வழிகள் என்ன என்பது தெரியாமல் நமது கைகள் கட்டப்பட்டிருப்பது தான் எதார்த்தமான உண்மை.

இதே நேரம் தற்போது நிகழும் குழந்தை கடத்தல் பற்றியும் உங்களுக்கு நன்றாக தெரியும். ஏன்? எதற்காக? இப்படி… சிறிய வயது குழந்தைகள் சீரழிக்கப் படுகிறார்கள் என்பது  பற்றிய கதைக்களம் தோடு உருவாகி வருகிறது “ஷூ” என்ற இந்த திரைப்படம்.

ஒற்றை வார்த்தை அல்ல. ஒற்றை எழுத்தை  தலைப்பாகக் கொண்டு வரும் “ஷூ” படம்  நிச்சயமாக இதற்கான ஒரு சொல்யூஷன் ஆக அமையும் என்று நாம் சொல்லலாம்.

ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை பேசக்கூடிய இந்த கதையானது மக்கள் மத்தியில் பிரபலம் அடையும் வண்ணம் நிச்சயமாக இந்தப் படத்தை இயக்குபவர்  எஸ்.கல்யாண் இயக்குவார்.இவரின் தரமான இயக்கத்தை படம் வெளிவந்த பின்னால் நாம் காணலாம்.

---- Advertisement ----

இந்தப் படத்தில் கதாநாயகன் யார்? என்று கேட்டதற்கு படத்தில் கதாநாயகனே கிடையாது, கதையின் கரு தான் படத்தின் கதாநாயகன்  என்று கூறியது மிகவும் வித்தியாசமாகவும், வினோதமாகவும் இருந்தது. இதுவரை தமிழ் திரையுலகில் கதாநாயகன் இல்லாமல் ஏதாவது படம் வந்திருக்கிறதா? என்பதை யோசித்துப் பார்த்து சொல்லுங்கள்.

 மேலும் வத்திக்குச்சி படத்தில் நடித்த திலீப்குமார் மற்றும் அந்தோணிதாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து அசத்துவார்கள்.

அத்தோடு தனது மகள் ப்ரியா கல்யாண் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்து மக்களை இடங்களில் மக்களின் மனதில் இடம் பிடிப்பார் என்று இயக்குனர் கூறினார்.

அடடா…படத்தில் கதாநாயகன் இல்லை. படத்தின் பெயரில் ஒரே எழுத்து … இப்படி பல புதுமைகளை புகுத்தி இருக்கும் இந்த இயக்குனரின் படம் வெற்றியடைய வாழ்த்துவதோடு இந்த படத்தை காண்பதற்கும் ஆவலாக எல்லோரும் காத்திருக்கிறார்கள்.

---- Advertisement ----