பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகளும், நடிகையுமான ஷ்ரத்தா புகைப்படக் கலைஞர் ரோஹன் ஸ்ரேஷ்தாவை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். சக்தி கபூர் குடும்ப நண்பரின் மகன் தான் இந்த ரோஹன். ஷ்ரத்தா, ரோஹனுக்கு விரைவில் திருமணம் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது தெரிய வந்திருக்கிறது.
ஷ்ரத்தாவுக்கு ரோஹனை சிறு வயதில் இருந்தே தெரியும். ரோஹனின் தந்தை பிரபல புகைப்படக் கலைஞர் ராகேஷ் ஸ்ரேஷ்தா. தாய், ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக இருந்தவர்.
ஷ்ரத்தா கபூர் தன் பிறந்தநாளை கொண்டாட அண்மையில் கோவாவுக்கு சென்றார். அந்த கொண்டாட்டத்தில் ரோஹன் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களாகவே ரோஹன், ஷ்ரத்தா இடையே பிரச்சனையாக இருந்ததாம்.
இதையும் படிங்க : “என்னோட இந்த உறுப்பை பார்த்து.. ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க…” – ஓப்பனாக கூறிய “விக்ரம் வேதா” பட நடிகை..!
இதையடுத்து பிப்ரவரி மாதம் ரோஹனை பிரிந்துவிட்டாராம் ஷ்ரத்தா. காதல் முறிவு குறித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இன்னும் சொல்லுங்கள் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா.
கெரியரை பொறுத்தவரை ரன்பிர் கபூருடன் சேர்ந்து லவ் ரஞ்சனின் படத்தில் நடித்து வருகிறார் ஷ்ரத்தா. அந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.இது தவிர்த்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஷ்ரத்தாவின் காதல் காலாவதி ஆனதற்கு என்ன காரணம் என்று பாலிவுட் மீடியாக்களில் பொதுவாக ஒரு செய்தி வட்டமடித்து வருகின்றது. அது தான், தமிழில் வெளியான் ஆடை படத்தின் ரீமேக்கில் ஷ்ரத்தா கபூர் நடிப்பது.
உடம்பில் பொட்டுதுணி கூட இல்லாமல் தன்னுடைய காதலி ஒரு படத்தில் நடிப்பதை ரோஹன் விரும்பவில்லை எனவும் இந்த படத்தில் நடிக்க கூடாது என்று கூறியதால் தான் இருவருக்கும் பிரச்சனையே ஆரம்பித்தது. கடைசியில், காதல் முறிவில் முடிந்து விட்டது என பாலிவுட் மீடியாக்கள் செய்திகளை பறக்கவிட்டு வருகின்றனர்.