ஸ்ருதிஹான் ரகசிய திருமணம்…! – ரசிகர்கள் அதிர்ச்சி..! – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

நடிகை ஸ்ருதிஹாசன் ( Shruti Hassan ) ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என வாங்க பாக்கலாம்.

தமிழ் சினிமாவில் எளிதில் ஒருவர் உயர்ந்த இடத்தை அடைவது கடினம். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால், வாரிசு நடிகர்கள் தனது தந்தை அல்லது தாயின் பிரபலத்தை வைத்து, வாய்ப்புகளை எளிதில் பெற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், சிறுவயதில் இருந்தே திரைத்துறையில் அறிமுகமாகி, தனக்கென்று ஒரு இடம்பிடித்தவர் நடிகர் கமல்ஹாசன். முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவருக்கு, ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். அவர்களில், மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சூர்யா நடித்த 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகான இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன், தெலுங்கு, இந்தி பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இறுதியாக, சிங்கம் 3 படத்திற்கு பிறகு ஸ்ருதிஹாசனுக்கு பெரிதாக வாய்ப்புகள் கைகூடவில்லை. அதோடு, ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே நடிகை சுருதி ஹாசன் அவர்கள் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து வந்தார்.

தனது தந்தைக்கு அறிமுகப்படுத்திய நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக காதல் முறிவு ஏற்பட்டது. ஸ்ருதியின் காதலர் மைக்கேல் வேறொரு பெண்ணுடன் காதலில் விழுந்த நிலையிலும், இந்த மனமுறிவில் இருந்து ஸ்ருதிஹாசனால் மீண்டு வர முடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஸ்ருதி ஹாசன் அடிக்கடி ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படங்களையும்,வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கமலிடம் தெரியாமல் ஸ்ருதிஹாசன் வாய் திறந்து மாட்டிக் கொண்டார்.

இந்த சூழலில், ஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலிப்பதாகவும், இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. சாந்தனு மும்பையைச் சேர்ந்த பிரபல டூடுல் கலைஞர் ஆவார். இருவரும் அடிக்கடி பொதுவெளியில் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும், கிளாமரான உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், ஸ்ருதிஹாசனுக்கும், சாந்தனு ஹசாரிக்காவுக்கும் திருமணமாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன.

இது குறித்து சாந்தனுவிடம் பயனர் ஒருவர் கேள்வி கேட்டபோது, இப்போது தான் நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்.

கலை, இசை என பல வழிகளிலும் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஆடைகளை வழிகளிலும் போன்ற பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே இது எங்கள் இருவருக்கும் ஒரு ஆக்கபூர்வமான பயணமாகும். நாங்கள் இருவரும் படைப்பு குறித்து உரையாடுகிறோம். இது உண்மையில் ஊக்கம் அளிப்பதோடு முன்னோக்கி செல்ல உதவுகிறது.

நான் எப்போதும் ஸ்ருதிஹசனால் ஈர்க்கப்பட்டதைப் போல, அவரும் என்னால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இது தான் எங்களுக்குள் ஈர்க்கப்பட்டு உறவு. நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே நடந்துகொள்கிறோம். நாங்கள் கிரியேட்டீவாக யோசிப்பவர்கள். எங்களுக்கு கிரியேட்டீவாக திருமணம் முடிந்துவிட்டது,என கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசனின் காதலரின் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளனர். தந்தை கமல்ஹாசனுக்கு தெரியாமலே திருமணம் செய்து விட்டீர்களா..? என்று கேட்டு, பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …