ஹீரோசிம்பு பார்த்து தான் நான் எல்லாமே கத்துகிட்டேன் கியூட்டா சொன்ன வெந்து தணிந்தது காடு ஹீரோயினி – சித்தி இத்னானி!

மாநாடு படத்துக்குப் பின்னால் எதிர்பார்க்கக்கூடிய மிக பிரம்மாண்டமான இந்த வெந்து தணிந்தது காடு படத்தில் நடிகர் சிம்பு நடித்து இருக்க  அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி  இருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த வெந்து தணிந்தது காடு இயக்கிய கௌதம் மேனன் பற்றி மிகத் தெளிவாகவும் அழகாகவும் கூறியிருந்தார். எப்போதுமே கௌதம் மேனன் படத்தில் காதல் இழையோடி இருக்கும் அந்த மெல்லிய காதல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றார்.

 இந்த படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மிகச் சிறந்த இசை அமைத்திருக்கிறார். இது கண்டிப்பாக இந்த படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் என்று கூறியதோடு  தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விதம் பார்க்க ரசிக்கும்படி இருந்தது. இவரிடம் கேட்ட கேள்வி, உங்களுக்கு தெரிந்த சிம்புவின் 5 படங்களை கூறுங்கள் என்று கூறியவுடன் அவர் மாநாடு, வெந்து தணிந்தது காடு,  விண்ணைத்தாண்டி வருவாயா என்று அடுத்தடுத்த படங்களை கூறி அசத்தினார் இடையில் தடுமாற்றம் இருந்தாலும் அதுவும் ஒருவித அழகாகத்தான் தென்பட்டது.

 மும்பையை சேர்ந்த இந்த இளம் கதாநாயகிக்கு தமிழில் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அடக்கமான  பெண்ணான பாவை என்ற கேரக்டரை தான் இவர் செய்துள்ளார்.  முதல் படம் என்றாலும் இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் குறிப்பாக சிம்புவிடம் இருந்து நடிப்பையும், அமைதியை கவுதம் மேனனிடம் இருந்தும் மனிதத்தன்மையை ஏ ஆர் ரகுமான் இடம் இருந்துதான் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

 இதில் வந்திருக்கக்கூடிய ஐந்து பாடல்களும் தமக்குப் பிடித்த பாடல்கள்தான் என்றும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான பிளவர் இருக்கும் என்பதால் அது அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

முதல் படத்திலேயே மிகப்பெரிய கூட்டணியில் இணைந்து இந்த படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் என்றும்  சிம்புவிடம் இருக்க கூடிய அந்த நடிப்பு திறமையை பார்த்து பார்த்து தானும் கற்றுக்கொண்டேன் என்று மிக வெளிப்படையாக கூறி இருப்பது பாராட்டத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …