“வெள்ளரிக்காய் அதிகமா சாப்பிடா..!” – இம்மா பிரச்சனையா?

வெள்ளரிக்காய்:கோடை காலத்தில் நீர் சத்து உடலுக்கு அவசியம் தேவை. அந்த வரிசையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருவதோடு நீர் சத்தை தருகின்ற வெள்ளரிக்காயை அதிகளவு சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

cucumber

எனவே வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடும் போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

நீங்கள் அளவுக்கு அதிகமாக வெள்ளரிக்காயை சாப்பிடுவதின் மூலம் உங்கள் செரிமான அமைப்பில் சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக மாலை நேரத்துக்குப் பின் நீங்கள் வெள்ளரியை சாப்பிடும் போது உங்களுக்கு ஜீரணம் ஆகாமல் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.

cucumber

வெள்ளரியில் இருக்கக்கூடிய வேதிப்பொருளான குக்குர்பிட்டின் செரிமானத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாயு, வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நீர்ச்சத்தை உடலில் அதிகரிக்க நீங்கள் வெள்ளரிக்காயை சாப்பிடும் போது, அது அதிக அளவு கூடிவிட்டால் அதில் இருக்கக்கூடிய டையூரிடிக் பண்பு உங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

--Advertisement--

வெள்ளரிக்காயை அதிகளவு சாப்பிடும் போது தோல் சார்ந்த அலர்ஜி ஏற்படும். இதனால் நீங்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது. மேலும் இது சுவாசிப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தித் தரும் என்பதால் குறிப்பிட்ட அளவு மட்டும் நீங்கள் வெள்ளரிக்காயை சாப்பிட வேண்டும்.

cucumber

சைனஸ் பிரச்சனைகள் இருப்பவர்கள் வெள்ளரிக்காயை அதிகளவு சாப்பிடக்கூடாது. இதற்கு  உடலை குளிர்ச்சி படுத்தக்கூடிய தன்மை அதிக அளவு இருப்பதால் உங்களுக்கு சைனஸ் தொல்லையை அதிகரித்து விடும்.

மேலும் வைட்டமின் கே சத்து வெள்ளரியில் அதிகம் இருப்பதால் இது ரத்தம் உறைதலுக்கு துணை போகும். எனவே குறைந்த அளவு வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லது.

cucumber

வெள்ளரிக்காயை சாப்பிடும் போது நிச்சயமாக அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது அவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே மேற்கூறிய குறிப்புகளை உங்கள் மனதில் கொண்டு சத்து நிறைந்த காய் என்றாலும் எதையும் அளவோடு உண்பதன் மூலம் நமது உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு இந்தக் கோடையில் நீங்கள் வெள்ளரிக்காயை சாப்பிடுங்கள்.