கைநாட்டு வைக்கிறீங்க…. அப்படின்னா? ரொம்ப ஜாக்கிரதையா வைக்கணும்… இல்லேன்னா நிலைமை இப்படி தான்!

என்ன கைநாட்டு பற்றிய தலைப்பு டைட்டிலை இருக்குனு  நீங்க பாக்கறீங்களா?.  மிக விரைவில் தமிழ் திரைப்படத்தில்  வெளிவரக்கூடிய சிக்னேச்சர் படத்தைப் பற்றி தான் இங்கு நான் கூறுகிறேன். 

 

இந்த படத்தின் ஜீவன் மற்றும் நட்டி இணைந்து நடிக்கிறார்கள்.ஜீவனுக்கு மேசடிகள் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தில் நடிப்பது ஒன்றும் புதிதானது அல்ல. இவர் ஏற்கனவே இது போன்ற கதையில் நடித்து இருக்கிறார். இந்த கதைக்கான கதைக்களம் ஆனது படிப்பறிவில்லாத மக்களிடையே இருந்து கையெழுத்துக்களை திருடி பல ஏக்கர் நிலத்தை அபகரிப்பது தான். இந்த நில மோசடியை ஜீவன் மற்றும் நட்டி இணைந்து செய்கிறார்கள் அதைச்சுற்றி தான் படத்தின் கதை நகர்கிறது.

இந்தக் கதையில் சாதாரண மக்களோடு இணைந்து பயணித்து அவர்களின் டேட்டாக்களை திருட கூடிய அதி தீவிரமான தொடராக ஜீவன் இருக்கிறார். டேட்டாக்களை பயன்படுத்தி மக்கள் இடையே இருக்கக்கூடிய பொருட்களையும் நிலங்களையும் மோசடி செய்யக்கூடிய வில்லனாக நட்டி நடிக்கிறார்.

 மேலும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், இளவரசு, ஹரீஸ் பெராடி, ஜார்ஜ், மாறன் ஆகியோர்  சின்னத்திரை களத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை பக்ரீத் என்ற படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு  இயக்குகிறார்.திரைக்கதையை பொன்.பார்த்திபன் எழுத எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார்.

படத்தின் முக்கிய காட்சிகளை துபாய் மற்றும் மும்பையில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. மீதியிருக்கும் அனைத்துப் பகுதிகளும் சென்னையில் படமாக்கப்படும். இனிய படமானது ஒருவரின் சிக்னேச்சர் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்து உணர்த்தக்கூடிய படமாக இருக்குமாம். 

இந்த படத்தை பார்க்கும் கிராமத்தில் இருக்கக்கூடிய எல்லா மக்களும் இனி கையெழுத்துப் போட்டு தருவதற்கு ஏன் எதற்கு என்ற கேள்வியை கட்டாயமாக கேட்பார்கள். இது ஒரு மிகப்பெரிய புரட்சியாக இருக்கும்.

இந்த படத்தை பார்ப்பவர்கள் இனி அனாவசியமாக யாருக்கும் தனது சிக்னேச்சர்  போட்டு கொடுக்க மாட்டார்கள். மேலும் இப்படத்தின் மூலம் சிக்னேச்சர் கூறிய மரியாதை என்ன என்பதோடு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …