ரஜினிக்கு ஏவிஎம் போல சிம்புவுக்கு ஜீவிஎம்…. என டி ஆர் ராஜேந்திரனின் அசத்தல் பேச்சு!

ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மிகுந்த சிறப்பான அந்தஸ்தை கொடுத்த கம்பெனி ஏவிஎம் புரொடக்சன்சு என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலத்தான் சிம்புவுக்கும் தற்போது ஜிவிஎம் மிக சிறப்பான ஒரு நிலையை எனது மகனுக்கு தந்துள்ளது. மூன்று எழுத்துகளில் முன்னேறிய ரஜினியைப் போல் இன்று மூன்று எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறான் எனது மகன் சிம்பு என்று டி ஆர் ராஜேந்திரன் மிகவும் உருக்கமாக பேசியிருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

 திரை உலக வாழ்வே இனி தனக்கு கிடையாது என்று இருந்த தனது மகன் சிம்புவுக்கு ஊக்கம் அளித்ததோடு ஒரு வாய்ப்பும் கொடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின்பு வாழ்வு தந்த இயக்குனர் தான் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கியவர்.

 இந்தப் படத்துக்கான கதாபாத்திரம் 18 வயதிலிருந்து 20 வயதுக்குள் இருக்க வேண்டும். அப்படி சிம்புவால்  உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க முடியுமா? என்ற கேள்வியை  ஜெயமோகன் எழுப்பியபோது கௌதம்மேனன் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் தனது உடலை வெகுவாக குறைத்து செல்பி எடுத்து அந்த படத்திற்கு  நடிகன் தான் தான்  என்று சர்டிபிகேட் பெற்ற எனது மகன் கடுமையாக இந்த படத்திற்காக தன்னை உருக்கி உழைத்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு இந்த மூன்றுமே மிகப்பெரிய வெற்றியை சிம்புவுக்கு கொடுத்துள்ளது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு வெந்து தணிந்த காடுகள் உள்ளது. எனவே இந்த வெந்து தணிந்த காடுகள் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படம் பிடிக்க படலாம் என தெரிகிறது.

மேலும் கௌதம் மேனன் சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான தான் தயாராக இருந்தார்கள் இருந்தாலும் இடையில் ஏற்பட்ட பெரும் தொற்று காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு உண்மை சம்பவத்தை படம் பிடித்தால் என்ன என்ற கேள்வி எழுந்தபோது வெற்றிமாறனிடம் தொடர்பு கொண்டபோது வெற்றிமாறன் தான் ஜெயமோகனின் அலைபேசி எண்ணை கொடுத்தாராம். அப்போது கௌதம் மேனன் ஜெயமோகனிடம் தொடர்பு கொண்டு பேசியபோது அக்னி குஞ்சு ஒன்றை கண்டேன் என்ற கதையை கூறினாராம் அந்த கதைதான் இன்று வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

விரைவில் நதிகளில் நீராடும் சூரியன்….

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …