சிம்பு எனக்கு இதை செய்தால்.. கூல் சுரேஷை விட 10 மடங்கு நானும் பண்ணுவேன்..! – விஜயலட்சுமி கிளப்பிய பரபரப்பு.!

 மாநாடு வெற்றிப் படத்திற்குப் பின்பு  நடிகர் சிம்புவுக்கு வெந்து தணிந்தது காடு மிகப் பிரம்மாண்ட வெற்றியைத் தந்தது இந்த வெற்றிக்கு காரணம் பலவகைகளிலும் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கூல் சுரேஷ். சிம்புவின் தீவிர வெறியரான இவர் வெந்து தணிந்தது காடு படத்திற்கு செய்யப்பட்ட  விமர்சனம் வெந்து தணிந்தது காடு பாரு சிம்புவுக்கு வணக்கத்த போடு இந்த வாசகம் பட்டிதொட்டியெங்கும் வைரலாக பரவியது.

இந்த படத்தில் கௌதம் மேனன் மற்றும் ஏ ஆர் ரகுமான் சிம்பு காம்பினேஷன் மீண்டும் ஒர்க் அவுட்டாகி  சிம்புவுக்கு ஒரு மிகப்பெரிய கம்ப கை கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவிற்கு சிம்புவை ஹெலிகாப்டரில்  வரவைத்து விழா மேடையில் இறக்கிய விதம் மாசை கிளப்பிவிட்டது.

இந்த சூழ்நிலையில் என்ன கூல் சுரேஷ் என் அக்கா மகளுக்கு உதவி செய்வதாக சிம்பு வாக்குறுதி தந்தால் நிச்சயமாக சிம்புவுக்காக நான் பல மடங்கு விமர்சனம் செய்தே அதுவும் அவருக்கு சேவை செய்வேன் என்று கூறியிருக்கிறார் விஜயலட்சுமி.

இந்த விஜயலஷ்மி தான் நடிகரும் அரசியல்வாதியுமான  சீமான் மீது MeToo புகார் அளித்தவர். உடல்நிலை சரியில்லாத இவர் அக்கா மகளுக்கு உதவ வேண்டும் என்றும்.. அப்படி செய்தால் கூல் சுரேஷை விட 10 மடங்கு அதிகமாக நான் செய்வேன் என கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி கூறியதாவது, எனது அக்காவின் மகள் தற்போது சிம்புவின் வீட்டின் அருகாமையில் இருக்கும் ஜெயப்ரதாவின் இல்லத்தில் தான் இருக்கின்றார்.

என் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தையை சரியாக கவனித்துக்கொள்ள முடியவில்லை. எனவே என் அக்கா மகளுக்கு நடிகர் சிம்பு ஏதேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கும். அவ்வாறு சிம்பு உதவி செய்தால் கூல் சுரேஷை விட பத்து மடங்கு சிம்புவிற்காக குரல் கொடுப்பேன் என்றார் விஜயலட்சுமி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …