எமோஷனல் கிங் நடிகர் சிம்புவின் அப்பா டி ஆர் ராஜேந்திரன் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றிய பேச்சு!

 சினிமாவில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகர் என்றால் அது நடிகர் சிம்புவை தான் கூறவேண்டும். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. இவர் வெளிப்படையாக பேசுவதால்  ஏற்பட்ட சிக்கல்கள் ஏற்படுவது தெரிந்தாலும் எதையும் மறைக்காமல்  நினைத்ததை வெளிப்படையாக கூறி விடும் தன்மையை இன்றுவரை மாற்றிக் கொள்ளாத ஒரு நல்ல மனிதர்.

 திரைத்துறையில் மிகப்பெரிய சரிவை சந்தித்த இவர் மாநாடு படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்று  மீண்டும் ஒரு ரவுண்ட் அடிக்க வந்துவிட்டார். இந்த வரிசையில் தற்போது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

எனவே நிச்சயமாக இந்த படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறலாம். ஏற்கனவே இவர்  இயக்குனர் கௌதம் மேனன் உடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து தனது மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவருக்குள் இப்படி ஒரு மென்மையான நடிப்பு இருந்ததா என்று நாம் ஆச்சரியப்படும்படி அது இருந்தது.

இப்போது  வெந்து தணிந்தது காடு  படத்தில்  இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்தப் படமும் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது போல் இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் என தெரிகிறது. படத்தின் முதல் பாகம் நாளை வெளிவர உள்ள நிலையில் சிம்புவின் அப்பா படத்தை பற்றி பேசும் போது தனது மகன் இந்த படத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். கடுமையான உழைப்பு இவருக்கு நற்பெயரை பெற்றுத் தரும் என்றார்.

---- Advertisement ----

மேலும்  இந்த படத்தில் 20 வயது இளைஞனாக சிம்பு இப்படி நடிப்பாரா என்று எனக்கு முதலில் சந்தேகமாக இருந்தது பின்  டைரக்டர் கௌதம் மேனன் கொடுத்த  நம்பிக்கையின் பெயரில்  எனக்குள் தைரியம் பிறந்தது.

இதையடுத்து படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை குறைத்து  இந்த படத்திற்கான போட்டோ ஷூட்டில் புகைப்படத்தை எடுத்து ஜெயமோகனிடம் காண்பித்தா.ர் அவரும் இளைஞர் ஆகவே தாங்கள் மாறி விட்டீர்கள் என்று பாராட்டியதை நான் என்று நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த படம் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

---- Advertisement ----