“மோனல் இறந்து 20 வருடம்..” – நடிகை சிம்ரன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்..!

பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மோனல். இவர் பிரபல நடிகை சிம்ரனின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. மோனல் கடந்த 2002ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு காரணம் அன்றைய நாட்களில் இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கிய குணால், மோனல் காதல் பிரிவு தான் என பத்திரிகைகளில் எழுதப்பட்டது. ஆனால் அது எல்லாம் பெரும் பொய் என சிம்ரன் குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மோனல் தற்கொலை..

மோனல், குணாலை காதலிக்கவில்லையாம். கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னாவைதான் காதலித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காதல் முறிவு ஏற்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அதாவது, 2002-ம் வருடம் ஏப்ரல் 14-ம் தேதி மோனல் தற்கொலை செய்துகொண்டார் எனவும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சமயத்தில் சிம்ரன் பஞ்சதந்திரம் படப்பிடிப்பிற்காக வெளிநாடுகளில் இருந்ததாகவும் ஆங்கில நாளிதழ்களில் கூறியுள்ளாராம். இந்த தற்கொலையின் உண்மையை கண்டுபிடிக்காமல் இருக்க கலா மாஸ்டரிடம் அப்போது நெருக்கமாக இருந்த மும்தாஜ் மற்றும் ரியாஸ் ஆகியோர் மோனல் இறந்த பிறகு அவரது வீட்டிற்குச் சென்று கையில் கிடைத்த தடயங்கள் எல்லாம் எடுத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்திருக்கிறாராம்.

சிம்ரன் வருவதற்குள் எஸ்கேப்..

மேலும் மோனலின் பணம் மற்றும் வங்கிக் கணக்குகளை குறிப்பிட்டுள்ள டைரி ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது உண்மையா..? என தெரிந்து கொள்ள தொலைபேசி ஆய்வாளர்களிடம் கடைசியாக வந்த ஃபோன் கால் யாருடையது என ஆய்வு செய்தபோது ரியாஸ் தான் போன் செய்துள்ளார் என தெரிந்து கொண்டாராம்.

---- Advertisement ----

சிம்ரன் திரும்பி வருவதற்குள் இருவரும் வேறு பகுதிக்கு சென்று தஞ்சம் அடைந்து விட்டார்களாம். இருந்தும் சிம்ரன் கூறியது உண்மையா பொய்யா என பல நாளிதழ்களில் பேச்சு அடிபட்டது. ஆனால் அது உண்மையாக இருக்கலாம் என சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வாய்ப்பை இழந்த மும்தாஜ்..

காரணம் கலா மாஸ்டர் மற்றும் மும்தாஜ் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். மோனலின் தற்கொலைக்குப் பிறகு மும்தாஜுக்கு படவாய்ப்புகள் சுத்தமாக வரவில்லை. நீண்ட நாட்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிய வரை கலா மாஸ்டர் தன்னுடைய செல்வாக்கை உபயோகப்படுத்தி மானாட மயிலாட என்னும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பணி வாங்கிக் கொடுத்ததாகவும் தெரியவருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது சிம்ரனின் புலம்பல் உண்மைதானா என நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு சந்தேகம் கிளம்பியது.

மோனல் நினைவு நாள்..

இன்று ( 14 April  ) நடிகை மோனலின் நினைவு நாள். இதனை தொடர்ந்து அவரது நினைவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிம்ரன். அதில்,  இங்கே நீ என்னுடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டே இருப்போம் என எனக்கு தெரியும்.

20 வருடங்கள் கடந்தாலும், உன்னுடைய ஒரு சிறு பகுதி எப்போதும் என்னுள்ளே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. நாங்கள் அனைவரும் உன்னை மிஸ் பண்றோம் மோனு. என்று உருக்கமாக ஒரு பதிவை எழுதியுள்ளார்.

---- Advertisement ----