மன்மதன் படத்தில் STR-க்கே விபூதி அடிச்ச சிந்து துலானி-யா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

கடந்த 1983 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த நடிகை சிந்து துலானி. தற்பொழுது இவருக்கு வயது 39 ஆகின்றது. தன்னுடைய20-வது வயதில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன் பிறகு மன்மதன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படமும் சிந்து துலானிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறத் தவறியது. எனவே சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். குறிப்பிட்டுச் சொல்லும் படியாக மன்மதன் படத்தில் காதலனை ஏமாற்றும் காதலியாக நடித்து இருந்த சிந்து துலானி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றார்.

அந்த அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து, அலையடிக்குது, மஜா, பசுபதி c/o ராசக்காபாளையம், பந்தயம், முரட்டுக்காளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு படமொன்றில் நடித்து இருந்த இவர் அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். பிறகு சுரேந்தர் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை சிந்தனைக்கு ஒரு மகளும் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

ஆனால் இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. ரகசியமான முறையில் திருமணம் செய்துகொண்டதால் இவர் எங்கே இருக்கிறார் என்ன ஆனார் என்ற எந்த விபரமும் இல்லை. மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் நடிகை சிந்து துலானி.

மீண்டும் சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்ற எந்த ஒரு விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், மன்மதன் படத்தில் STR-க்கே விபூதி அடிச்ச சிந்து துலானி இது..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …