இதை பண்ணாத-ன்னு 1000 முறை சொன்னேனே.. திடீர்-ன்னு இப்படி ஆகிடுச்சே..! – நடிகர் சிங்கமுத்து கண்ணீர்..!

நடிகர் மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்தியிருகிறது.

இத்தனை நாட்களாக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு ஆயிரங்களில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து தற்போது தான் சினிமா துறையிலும் சீரியல் துறையிலும் பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொண்டிருந்தார்.

சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று கணிக்கப்பட்ட மாரிமுத்து திடீரென்று இப்போது எதிர்காலமே இல்லாமல் மறைந்து விட்டார் என இவருடன் பழகிய பல நடிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிங்கமுத்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். மாரிமுத்துவிடம் அடிக்கடி டென்ஷன் ஆகாத டென்ஷன் ஆகாதன்னு ஒரு ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன்.

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அதிகப்படியான டென்ஷன் ஆகக்கூடிய ஒரு ஆள் நடிகர் மாரிமுத்து. சில நிமிடங்களுக்கு எதற்கு நான் அப்படி கோபப்பட்டேன் என்று அவரே யோசித்துக்கொண்டதும் உண்டு.

ஆனாலும், சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி கோவப்படுவது டென்ஷன் ஆவது என இருப்பார். இது போல் டென்ஷனாகாத என ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன்.

ஆனால் இப்போது திடீரென மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தியை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவருக்கு இரத்த அழுத்தம் அதிமாக இருந்தது. என்ன செய்வது என தெரியவில்லை.

எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் மரணத்தின் பிடியில் சிக்கி தான் ஆக வேண்டும். அதை தவிர எனக்கு எதுவும் தோன்றவில்லை.

கண்ணீரை அடக்க முடியவில்லை. நிறைய கஷ்டங்கள் பட்டிருக்கிறார். சினிமா துறையில் மிகவும் போராடி தற்போது தான் சீரியல் சினிமா என அவருடைய திரை பயணம் வேகம் எடுத்தது.

ஆனால் இந்த நேரத்தில் இவனுடைய இறப்பு என்பது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என பேசியிருக்கிறார் நடிகர் சிங்கமுத்து.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …