நான் ஓவரா சீன் போடுறேனா.. பாடகி ராஜலட்சுமி கொடுத்த பதிலை பாருங்க…!

நாட்டுப்புறப் பாடகியான ராஜலட்சுமி தனது கணவர் செந்தில் கணேஷ் உடன் இணைந்து கிராமங்களில் கச்சேரிகளுக்கும்,

கோவில் திருவிழாக்களிலும், குடும்ப சுப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடல் பாடி பிழைப்பு நடத்தி வந்தார்கள்.

அவர்களுக்கு விஜய் டிவியில் இருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

பாடகி ராஜலக்ஷ்மி – செந்தில் கணேஷ்:

அந்த மேடையில் கணவன் மனைவி இருவரும் ஜோடியாக பங்கேற்று பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்து இழுத்தார்கள்.

--Advertisement--

அதன் மூலம் அவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்கள். குறிப்பாக செந்தில் கணேஷ் பாடல் மக்களுக்கு வெகுவாக பிடித்து விட்டது.

இவர்கள் இருவரும் இணைந்து பாடினாலே கலகலப்பான மேடை மாறிவிடும் அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்து விட்டார்கள்.

அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக செந்தில் கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிறகு,

செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதிக்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் மற்றும் கச்சேரி வாய்ப்புகள் என மளமளவென குவிய தொடங்கியது.

புகழின் உச்சத்தை தொட்ட செந்தில் – ராஜலக்ஷ்மி;

இதனால் குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பணமும் புகழும் அவர்களுக்கு வந்து விட்டது. வீடு கார் பங்களா என மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகர்கள் ரேஞ்சிற்கு வளர்ந்து விட்டார்கள்.

அதன் பிறகு அவர்கள் செல்லும் கச்சேரி வீடியோகளை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

அதை பார்த்து நெட்டிசன்ஸ்…ராஜலட்சுமி முன்பை போல இப்போது இல்லை ரொம்ப சீன் போடறாங்க என்றெல்லாம் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் அண்மையில் மாடல் உடை அணிந்து வெளிநாட்டுக்கு சென்று இருந்தார் ராஜலக்ஷ்மி அதை பலர் மோசமாக விமர்சித்து தள்ளி இருந்தார்கள்.

அற்பனுக்கு வாழ்வு:

“அற்பனுக்கு வாழ்வு வந்தால் அந்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்” அதுபோல தான் ராஜலட்சுமி குணமும் அவரது வாழ்க்கையும் என பங்கமாக கலாய்த்து தள்ளி இருந்தார்கள்.

இந்நிலையில் தன்னைக் குறித்து வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் ராஜலட்சுமி ஆரம்ப காலத்தில் நான் கொடுத்த பேட்டிகளின் கமெண்ட்களை வாசிப்பேன்.

அப்போது நிறைய பேர் ராஜலட்சுமி ரொம்ப சீன் போடுகிறார் பந்தா காட்டுகிறார் என்றெல்லாம் கமெண்ட் செய்வார்கள்.

அதை படித்து விட்டு கோபப்படவில்லை. என்னை நானே ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்த்தேன். நிஜமாகவே நாம் ஏதாவது வழக்கத்திற்கு மாறாக செய்கிறோமா?

அல்லது பந்தா காட்டுவது போல் ஏதாவது பேசுகிறோமா ஏன் இப்படி சொல்கிறார்கள் என ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.

ஆனால், நான் எந்த இடத்திலும் என்னுடைய நிலை தவறி பேசியது கிடையாது. நமது தலைக்கு ஏறியது கிடையாது.

எனக்கு என்னுடைய நிலை என்ன என்று தெரியும் இப்படி கருத்து தெரிவிப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஆயிரம் பேர் இருக்கும் பொழுது அங்கே இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக ஒரு நூறு பேர் இருப்பார்கள். அவர்களுக்காக நாம் நம்மை கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்று நான் யோசித்தேன்.

சந்தோஷத்தை தொலைக்க விரும்பல:

எதனால் அவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று கூட தெரியவில்லை குறிப்பிட்ட இந்த விஷயத்தை கூறி அப்படி சொன்னார்கள் என்றால் நாம் அதை எடுத்து பார்க்கலாம் திருத்திக் கொள்ளலாம்.

ஆனால், வெறுமனே என்னை திட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக திட்டுபவர்களுக்கு நான் பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர்களுக்காக என்னுடைய சந்தோஷத்தை தொலைக்க நான் விரும்பவில்லை என பேசி இருக்கிறார் பாடகி ராஜலட்சுமி.