சைரன் படத்தில் போலீஸ் வேடத்தில் கலக்கப்போவது நம்ம கீர்த்தி சுரேஷ்

இந்திய திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில்  நடித்துள்ளார். மேலும் இவர் 2013ம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக கீதாஞ்சலி என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். மேலும் இவருக்கு ஏசியாநெட் சிறந்த நடிகைக்கான விருது இந்த கீதாஞ்சலி படத்திற்காக கிடைத்தது.

இவர் தற்போது நடிகர் ஜெயம் ரவிக்கு இணையான கதாபாத்திரத்தில்  போலீஸ் வேடத்தில் சைரன் படத்தில்  நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளது.படத்தில் முக்கிய வேடத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

இப்போது பொன்னியின் செல்வன், அகிலன், ஜனகணமன போன்ற படங்களை முடித்துள்ள தருவாயில் ராஜேஷ் இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் அவர் நடிப்பதாக உள்ளது இந்த படத்திற்கு ஜேஆர் 30 என்று பெயரிடப்பட்டுள்ளது இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

அதனை அடுத்து தற்போது தனது முப்பதாவது படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி 31வது படமான சைரனில்   நடிக்க உள்ள இந்தப் படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் புதிய கூட்டணியில் இவர் இணைந்திருப்பது ரசிகர்களின்  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த படத்தை  ஆண்டனி பாக்யராஜ் இயக்க ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க  உள்ளது. ஏற்கனவே விசுவாசம், இரும்புத்திரை போன்ற படங்களில் எழுத்தாளராக பணியாற்றியிருக்கிறார்.

 இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி போன்றோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக உள்ளது இந்த படத்தின் படபிடிப்பு சென்னையில்  நடைபெறும்.இத்துடன் படக்குழு சைரன் படத்தின் புரமோஷன் போஸ்டரையும் மிக நேர்த்தியான முறையில் வெளியிட்டிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

எனவே அதிக எதிர்பார்ப்புடன்  கலக்க இருக்கும் கிரைம் திரில்லரான சைரன் படம் மிகுந்த சத்தத்துடன் கெத்தாக வருமா?

போலீஸ் அதிகாரியாக கீர்த்திசுரேஷ் வலம் வரும் வண்டியில் சைரன் சத்தம் அதிகமாக இருக்கும் போல அதனால் தான் இந்த படத்துக்கு சைரன் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷின் இசையில்  ஒரு கைதியாக நடித்திருக்கும் ஜெயம் ரவி யை  எப்படி பாடாய் படுத்துவார் கீர்த்தி சுரேஷ் என்பதை பொறுத்துதிருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …