“ஆச்சரியம் ஆனால் உண்மை..!” – தரையில் அமர்வதின் மூலம் இவ்வளவு நன்மைகளா?

இன்று இருக்கும் இளம் தலைமுறையினர் தரையில் அமர்வதை  கௌரவ குறைச்சலாக ஆக நினைக்கிறார்கள். ஆனால் தரையில் அமருவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது.

 எனவே சில மணி நேரமாவது நீங்கள் தரையில் அமருவதை பழக்கப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. அதை விடுத்து சோபா சேர்களில் உட்கார வேண்டும் என்ற எண்ணத்தை சற்று ஒதுக்கி வையுங்கள்.

இந்த கட்டுரையில் தரையில் அமருவதின் மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

தரையில் அமர்வதால் ஏற்படும் நன்மைகள்

பலரும் நமது முதுகெலும்பு தொண்ணூறு டிகிரியில் நேராக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில் தவறு. இது எஸ் வடிவத்தில் அமைந்திருக்கும். குறிப்பாக கழுத்து, மார்பு, இடுப்பு போன்ற பகுதிகளில் மூன்று வளைவுகள் இருக்கும். எனவே தான் இதனை எஸ் வடிவ அமைப்பு என்று கூறுகிறோம்.

தரையில் அமரும் பழக்கம் கொண்டவர்களுக்கு முதுகெலும்பு ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாக இந்த வளைவுகளுக்கு அது சரியாக பொருந்தி இருப்பதால் முதுகெலும்பில் உள்ள வளைவில் சிக்கல்களை ஏற்படுத்தாது. எனவே தரையில் அமருவது மிகவும் சிறப்பானது.

---- Advertisement ----

தொடை, கீழ் முதுகு மற்றும் இடுப்பு பகுதியை இணைக்க கூடிய ஹிப் ப்ளக்சார் தசையை வலுவாக்க நீங்கள் கீழே அமரும்போது அது உதவி செய்கிறது. மேலும் இந்த தசையானது அதிக அளவு உடற்பயிற்சி செய்வதால் பாதிப்புகள் ஏற்படலாம். அந்த பாதிப்பை சரி செய்ய நீங்கள் தரையில் அமருவதின் மூலம்  தசைகளுக்கு வலு கிடைக்கும்.

தரையில் அமர்வதின் மூலம் கீழ் முதுகுத் தசைகளில் அழுத்தம் ஏற்படுவதால் நீங்கள் அமரும்போது குனிவதை தவிர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் உடல் அமைப்பும் தோற்றமும் அழகாக மாறும்.

நீங்கள் தரையில் அமர்ந்து எழுவதின் மூலம் உங்கள் ஆயுள் அதிகரிப்பதாக பிரிவெண்டீவ் கார்டியாலஜி பத்திரிக்கை ஆய்வில் கூறியுள்ளது. மேலும் தரையில் அமர்வதின் மூலம் உடலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. முதுகெலும்பு தசையில் நிலைப்பு தன்மையை இது உறுதி செய்வதாக  மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனவே மேற்கூறிய நன்மைகளைக் கருதி எப்போதும் நீங்கள் நாற்காலியில் அமர்வதை சில நேரங்கள் ஒதுக்கி வைத்து விட்டு தரையில் உட்கார்ந்து வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

---- Advertisement ----