கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் சிவாஜி, விஜய், மணிவண்ணன், சிம்ரன், சரோஜாதேவி, எஸ் எஸ் சந்திரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்ஸ்மோர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவாஜி யார் என்று தெரியாமல் நடிகை சிம்ரன் சண்டை போட்ட நிகழ்வு குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர் செய்யார் பாலு youtube தரத்தில் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் சிவாஜி படப்பிடிப்பு ஏழு மணிக்கு ஆரம்பிக்கிறது என்றால் 6:15 மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் வந்து அமர்ந்து விடுவார். நடிகர் சிவாஜி 6:15 மணிக்கு வந்து விடுகிறார் என்பதால் ஒட்டுமொத்த பட குழுவும் 05:30 மணிக்கு தயாராகி இருக்கும்.
இப்படித்தான் ஒன்ஸ்மோர் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது 6:15 மணிக்கு நடிகர் சிவாஜி வந்துவிட்டார். படக்குழுவும் தயார் நிலையில் இருக்கிறது.
படப்பிடிப்பு 07:00 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடிகை சிம்ரன் காலை 09:30 மணிக்கு தான் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். இதனால் கடுப்பான படத்தின் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இப்படி செய்தால் நாங்கள் எப்படி படப்பிடிப்பு நடத்துவது.
காலையில் எடுக்க வேண்டிய காட்சி இப்போதே ஒன்பதரை மணி ஆகிவிட்டது. இனிமேல் கேமராவை ஆன் செய்து காட்சிக்கு செல்ல 10 மணி 11 மணி ஆகிவிடும்.
அதற்குள் மதிய உணவு இடைவேளை வந்துவிடும். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என நடிகர் சிம்ரன் சத்தம் போட்டு அன்றைய நாள் ஷூட்டிங்கை பேக்-அப் சொல்லி இருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி இருப்பதை அறியாமல் நடிகை சிம்ரனும் கூச்சல் போட்டு இருக்கிறார். இதனை பார்த்த நடிகர் விஜய் ஒரு நிமிடம் மிரண்டு போயிருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் சிவாஜி சிம்ரனை அழைத்து எந்த ஊருமா நீ..? என்று விசாரித்திருக்கிறார்.
நடிகை சிம்ரன் அப்போது தான் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுக நடிகையாக இருந்தார். நடிகர் சிவாஜி குறித்து முழுமையாக எதுவும் தெரியாமல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் நடிகை சிம்ரன்.
அதன் பிறகு சிம்ரன் அழைத்து நடிகர் சிவாஜி குறித்து விஷயத்தை கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு இவர்தான் அவரா..? என்று அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இனிமேல் தாமதமாகாது எனக் கூறியிருக்கிறார் நடிகை சிம்ரன்.
கடுமையான கோபத்தில் இருந்த எஸ்ஏ சந்திரசேகரை அழைத்த நடிகர் சிவாஜி அவ்வளவுதான் வேலை முடிந்தது. இனிமேல் தாமதமாக வர மாட்டார்கள் நீங்கள் அடுத்த வேலையை பாருங்கள் என்று அன்று படப்பிடிப்பு நடக்க ஒத்துழைப்பு கொடுத்து இருந்திருக்கிறார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.