கருவேப்பிலை ஆன தனுஷ்.. மைண்ட்வாய்ஸை சத்தமாக பேசிய Sk..! பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!

கருவேப்பிலை ஆன தனுஷ்.. மைண்ட்வாய்ஸை சத்தமாக பேசிய SK..! பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!

தமிழில் அதிக ரசிகர்களைக் கொண்ட வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பெரும் இடத்தை பிடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த பொழுது பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரே தொகுப்பாளராக அவர் இருந்தார்.

தனுஷ்

அதுவரை விஜய் டிவியில் தொகுப்பாளர்கள் என்றால் சாதாரணமாக நின்று விட்டு செல்பவராக இருந்தார்கள். ஆனால் தொகுப்பாளரும் நகைச்சுவை எல்லாம் செய்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய முடியும் என்பதை சிவகார்த்திகேயன்தான் அறிமுகப்படுத்தினார்.

அதற்கு பிறகுதான் விஜய் டிவிக்கு வந்த ரக்ஷன், மாகாபா போன்றவர்கள் அதே முறையை பின்பற்ற துவங்கினார்கள். இதன் மூலமாக சினிமா வட்டாரத்திலும் சிவகார்த்திகேயனுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில்தான் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் முதன்முதலாக சிவகார்த்திகேயனுக்கு காமெடியனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மைண்ட்வாய்ஸை சத்தமாக பேசிய SK

அதனைத் தொடர்ந்து மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் அதற்குப் பிறகு காக்கி சட்டை, ரெமோ மாதிரியான படங்களில் சண்டை காட்சிகள் வைத்து கொஞ்சம் சீரியஸாகவும் நடிக்க தொடங்கினார்.

கருவேப்பிலை ஆன தனுஷ்.. மைண்ட்வாய்ஸை சத்தமாக பேசிய Sk..! பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ச்சியை பெற்று தற்சமயம் தமிழில் உள்ள கமர்சியல் ஹீரோக்களில் முக்கியமானவராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கொட்டுக்காளி திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது இந்த படத்தை தயாரித்தது போலவே இன்னும் நிறைய படங்களை தயாரிப்பேன்.

காத்திருந்த அதிர்ச்சி

இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்துவிட்டால் அதில் ஒரு பங்கை எடுத்து இந்த படத்தின் இயக்குனருக்கு அடுத்த படத்திற்கு கொடுப்பேன் என்று கூறியிருந்தார் சிவகார்த்திகேயன். மேலும் அவர் கூறும்பொழுது இந்த பணத்தை கொடுத்து அவர்களுக்கு நான் உதவி செய்வதால் என்னால் தான் அவர்கள் வளர்ந்தார்கள் என்றெல்லாம் நான் கூறப்போவதில்லை.

கருவேப்பிலை ஆன தனுஷ்.. மைண்ட்வாய்ஸை சத்தமாக பேசிய Sk..! பின்னால் காத்திருந்த அதிர்ச்சி..!

ஏனெனில் என்னை அப்படித்தான் நிறைய பேர் கூறி பழக்கி வைத்திருக்கின்றனர் என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுதான் தற்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மறைமுகமாக சிவகார்த்திகேயன் தனுஷைதான் குறிப்பிடுகிறார் என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

ஆனால் இது குறித்து சிவகார்த்திகேயனோ அல்லது தனுஷோ எந்தவித பதிலும் இப்போது வரை அளிக்கவில்லை.