சமீபத்தில் நடந்த பிலிம் பேர் விருதுதான் தற்சமயம் அதிகமாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. பிலிம் பேர் விருது என்பது பல வருடங்களாகவே இந்திய சினிமாவில் வழங்கப்பட்டு வரும் விருதாக இருக்கிறது.
வட இந்தியாவில் இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது முக்கியமாக நடிகர்களால் அதிகமாக மதிக்கப்படும் ஒரு விருதாக இந்த விருது இருக்கிறது. பிலிம்பேர் துவங்கிய காலகட்டத்தில் பெரிய நடிகர்களே இதை வாங்குவதற்காக பல குறுக்கு வழிகளை பின்பற்றினார்கள் என்று கூறப்படுகிறது.
ஜோதிகாவும் கலந்துக்கொண்டார்.
அந்த அளவிற்கு ஒரு பெரிய விருது என்பதால்தான் பல பெரிய பிரபலங்கள் அதில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் தென்னிந்தியாவிலிருந்து பல நடிகர்களும் நடிகைகளும் அதில் கலந்து கொண்டனர். அப்பொழுது நடிகை ஜோதிகாவும் அதில் கலந்து கொண்டிருந்தார்.
நடிகை ஜோதிகா வழக்கத்துக்கு மாறாக அதிக கவர்ச்சியுடன் ஆடை அணிந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் கூட கவர்ச்சியாக நடிக்காமல் இருந்தார் ஜோதிகா.
இந்த நிலையில் அவர் ஏன் இப்பொழுது கவர்ச்சியாக மாறியிருக்கிறார் என்பதே கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது இந்தியாவை பொறுத்தவரை பாரம்பரிய ரீதியாகவே இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய ஆடைகள் எல்லாமே பெண்களின் உடலை மூடும் வகையில்தான் இருக்கிறது.
சிவக்குமார் பதில் என்ன:
ஆனால் வெளிநாட்டு ஆடைகள்தான் தொடர்ந்து உடலை காட்டும் விதத்தில் இருக்கிறது. பெரும்பாலும் வட இந்தியாவில் இந்த வெஸ்டர்ன் கலாச்சாரம் அதிகமாக பரவியிருப்பதால் அங்கு இருக்கும் நடிகைகள் மிக ஆபாசமாக உடை அணிந்து வருவதை பார்க்க முடிந்தது.
ஆனால் ஜோதிகாவும் அப்படி அணிந்து வந்தது ஒரு மோசமான விஷயம்தான் திரைப்படங்களுக்கு கவர்ச்சி தேவை என்பதால் அதில் கவர்ச்சியாக நடிப்பதை கூட மன்னித்து விடலாம். ஆனால் பொது இடங்களுக்கு எதற்கு வேண்டுமென்றே கவர்ச்சியாக வரவேண்டும். ஜோதிகாவை சூர்யாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்கு சிவகுமார் அதிகமாக யோசித்ததற்கு முக்கிய காரணமே இதுதான்.
இவர் ஒரு நடிகை இவரை திருமணம் செய்து வைத்தால் சரியாக இருக்குமா என்று யோசித்தார். அதனால்தான் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா கவர்ச்சியாக நடிக்கவே இல்லை. எந்த திரைப்படத்தில் நடித்தாலும் புடவை கட்டிக் கொண்டுதான் நடித்து வந்தார் ஜோதிகா. இப்படி இருக்கும் பொழுது இப்போது அவர் கவர்ச்சியாக விருது வழங்கும் விழாவில் தோன்றியிருக்கிறார்.
ஒருமுறை சிவகுமாருக்கு அருகில் வந்து ஒருவர் செல்பி எடுக்க வந்ததற்கு அவரது ஃபோனை தட்டிவிட்டார் சிவகுமார். யாருடைய வயிற்று எரிச்சலும் யாரையும் சும்மா விடாது இப்பொழுது அவருடைய குடும்ப குத்து விளக்கே இப்படி மாடர்ன் உடையில் வந்து நிற்கிறாரே இதற்கு என்ன செய்யப் போகிறார் சிவக்குமார் என்று கேட்டிருந்தார் சேகுவாரா.