பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!

பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த வாலி என்கிற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. அந்த திரைப்படத்தில்தான் அவர் நடிகை ஜோதிகாவையும் அறிமுகப்படுத்தினார். அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து குஷி என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

எஸ்.ஜே சூர்யா

இந்த படம் பயங்கரமான வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு வேறு நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்காமல் அதில் அவரே நடித்து வெளியிட்டார். அப்படியாக நியூ என்கிற திரைப்படம் வெளியானது. நியூ திரைப்படம் அப்பொழுது அதிக சர்ச்சையானது.

பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!

இருந்தாலும் அந்த படமும் நல்ல வெற்றியைதான் கொடுத்தது இப்படி ஆரம்ப கட்டத்தில் இயக்குனராக இருந்து வந்த எஸ்.ஜே சூர்யா கொஞ்சம் கொஞ்சமாக நடிகராக மாறினார். பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

பாட்ஷா படத்தோட கதை:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார் எஸ்.ஜே சூர்யா. அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்த நிலையில்தான் ஸ்பைடர் திரைப்படம் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஒரு மாற்றமாக அமைந்தது.

ஸ்பைடர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் எஸ்.ஜே சூர்யா அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மாநாடு, மார்க் ஆண்டனி மாதிரியான திரைப்படங்களில் வில்லனாக நடித்தார்.

லீக் செய்த எஸ்.ஜே சூர்யா:

தற்சமயம் தெலுங்கு நடிகர் நானி கதாநாயகனாக நடிக்கும் சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்கள் எஸ்.ஜே சூர்யா. இந்த படத்தில் ஒரு கொடுமையான போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார் எஸ்.ஜே சூர்யா.

பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஜே சூர்யா கூறும் பொழுது படத்தின் கதையை கொஞ்சமாக வெளியிட்டிருந்தார் அதில் அவர் கூறும்போது பாட்ஷா திரைப்படத்தின் பின்னணியில் எழுதப்பட்ட திரைப்படம்தான் இந்த சூர்யா சாட்டர்டே திரைப்படம். படத்தின் கதைப்படி சிறு வயது முதலே கதாநாயகன் மிகவும் கோபப்படுபவனாக இருப்பான்.

அவனது கோபத்தை அடக்குவதற்காக அவரது அம்மா அவனுக்கு ஒரு அட்வைஸ் கொடுப்பார். அந்த வாரத்தில் ஆறு நாட்களும் வரும் கோபத்தை அடக்கி வைத்து அதை சனிக்கிழமைகளில் மட்டும் வெளிப்படுத்தி விடு என்று கூறுவார். பிறகு அதுவே கதாநாயகனின் பழக்கம் ஆகிவிடுகிறது இதனால் கதாநாயகன் ஆறு நாட்கள் மாணிக்கமாகவும் ஏழாவது நாள் சனிக்கிழமை மட்டும் பாட்ஷாவாகவும் இருப்பார் இதுதான் படத்தின் கதை என்று கூறியிருக்கிறார் எஸ்.ஜே சூர்யா.