“கிளாமர் குயின்.. அழகு தேவதை..” – கவர்ச்சி உடையில்.. இணையத்தை கலக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை சுஜிதா..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முன்னணி கதாபாத்திரமான தனம் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா ( Sujitha ).

இதற்கு முன் பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவின், திருவனந்தபுரத்தில் பிறந்த சுஜிதா, இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு சத்யராஜின் ’பூவிழி வாசலிலே’, ரஜினியின் ‘மனிதன்’, மம்மூட்டியின் ‘அழகன்’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ‘வாலி’, இருவர்’, ’பள்ளிக்கூடம்’, ‘தாண்டவம்’, ‘தியா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் திரையைப் பகிர்ந்துள்ளார் சுஜிதா.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

---- Advertisement ----

எப்போதும், புடவை சகிதமாகவே தென்படும் இவர் மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுதும் கவர்ச்சி காட்ட முடியாது என்று கூறி அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டதாக சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சுஜிதாவிற்கு தனுஷ் என்பவருடன் திருமணமாகியது.இவருக்கு தன்வின் என்ற மகன் சுஜிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில், தற்போது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

---- Advertisement ----