Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அஞ்சலியை தொந்தரவு செய்த பிளாக் பாண்டி.. வரவைத்து துரத்திய SK.. அழுதுகொண்டே நடந்து சென்ற பிளாக் பாண்டி..!

அங்காடி தெரு படத்தில் நடித்த பிளாக் பாண்டியை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஏற்ற இவரது நடிப்பை பார்த்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள்.

லிங்கேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ் திரைப்பட உலகத்தில் நகைச்சுவை நடிகராக மாறியதை யாரும் எளிதில் மறக்க முடியாது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அஞ்சலியை தொந்தரவு செய்த பிளாக் பாண்டி..

இதனை அடுத்து தான் இவரை அனைவரும் அன்போடு பிளாக் பாண்டி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். 2000 ஆவது ஆண்டில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் பங்கேற்று இருக்கிறார்.

மேலும் இவரது அற்புத நடிப்பை லி முருகா, மஞ்சா வேலு, அங்காடி தெரு, தெய்வத்திருமகள், வேலாயுதம், மாசாணி ஜில்லா போன்ற படங்களில் பார்த்திருக்கலாம்.

---- Advertisement ----

பிளாக் பாண்டியும் நடிகை அஞ்சலியும் சமகால கட்டத்தில் திரைத்துறைக்குள் நுழைந்தவர்கள். இவர்கள் ஜெயந்தி மாஸ்டரிடம் நடனம் கற்றுக் கொண்ட போது மிக நன்றாக பழக்கம் ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்.

அந்த வகையில் ஜெயந்தி மாஸ்டர் இடம் நடனம் கற்றுக் கொண்டிருக்கும் போது நடிகை அஞ்சலி முன் வரிசையில் நடனமாடுவார். நான் பின் நின்ற படி நடனமாடுவேன் வாடி போடி என்று பேசக்கூடிய அளவுக்கு பழக்கம் இருந்ததாக பிளாக் பாண்டி கூறியிருக்கிறார்.

வரவைத்து துரத்திய எஸ் கே..

இதனை அடுத்து அங்காடி தெரு என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த போது எங்கள் நட்பு வளர்ந்தது. மேலும் ஜெயம் ரவியோடு இணைந்தும் ஒரு படத்தில் நடித்திருந்தோம்.

இந்த படத்தில் நடித்த போது அஞ்சலி என்னை சரியாக கண்டு கொள்ளவில்லை. பல முறை பேசியும் என்னிடம் அதிகமாக முகம் கொடுத்து பேசவில்லை. இதனை அடுத்து நான் அலைபேசியில் மெசேஜ் செய்தும் அவர் அந்த மெசேஜ் கூறிய ரிப்ளை செய்யவில்லை.

இதனை அடுத்து சினிமா துறையில் வளரக்கூடிய நிலையில் இருக்கும் அஞ்சலி தன்னை கண்டு கொள்ளவில்லை இது போல் ஏற்பட்ட அனுபவம் ஒன்று இரண்டு அல்ல என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் திரைப்படத்துறைக்கு வராத சமயத்தில் நானும் அவரும் இணைந்து பல படங்களுக்காக வாய்ப்புகளைத் தேடி வந்தோம்.

பின் வளர்ந்த நிலையில் ஒருமுறை சிவக்கார்த்திகேயனை சந்தித்த போது அதுவும் வாய்ப்பு கேட்டு தான் சென்றிருந்தேன். அங்கு எனக்கு அவர் ஒரு சிறு தொகையை கொடுத்து அனுப்பி விட்டார்.

இது என்னை இன்சல்ட் செய்வது போல இருந்தது எனினும் நான் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தில் இருந்து வந்து விட்டார்.

நடந்தது என்ன?..

இப்படி ஆரம்ப நாட்களில் சினிமா துறையில் நண்பர்களாக விளங்கிய சிலர் வளர்ந்த பிறகு தன்னோடு பழகிய நண்பர்களை மறந்து விடுவது இயல்பான ஒன்று தான் அந்த வகையில் நடிகை அஞ்சலியும் சிவகார்த்திகேயனும் தன்னிடம் நடந்து கொண்ட விபரத்தை பிளாக் பாண்டி வருத்தத்தோடு தெரிவித்தார்.

மேலும் இந்த விஷயத்தை பற்றி செய்யாறு பாலு அண்மை பேட்டி ஒன்றில் பேசியிருந்தது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் இது போல நடக்குமா? என்பதை யோசிக்க வைத்துள்ளது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top