அடேங்கப்பா..! – தனது ரேஞ்சை நிரூபிக்க SK செய்த தில்லாலங்கடி வேலை..!

கல்லூரி விழா மேடைகளில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய கலையுலக பணியை கலையுலக பணியை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து குறும்பட நடிகர் நிகழ்ச்சி தொகுப்பாளர் துணை நடிகர் மற்றும் சினிமா ஹீரோ என அடுத்தடுத்து தன்னுடைய திறமையால் உயரத்தை எட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்துள்ளார் பொதுவாக முன்னணி நடிகராக இருந்தாலும் மினிமம் கேரண்டி என்ற ஒரு அமைப்பு சில நடிகர்களுக்கு மட்டுமே இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் விஜய் ஆகிய இருவரையும் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் தான் மினிமம் கியாரண்டி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன.

குடும்ப ரசிகர்கள் இருக்கும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை கவரும் ரசிகர்களுக்கு இந்த மினிமம் கேரண்டி என்பது கிடைத்து விடும். ஆனால் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ஈர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.

தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்ற டைட்டிலை காலங்காலமாக தனதாக்கி வைத்துள்ள நடிகர் அஜித்குமாருக்கு கூட இப்படி மினிமம் கேரன்டி என்ற அமைப்பு கிடையாது.

ஏனென்றால் குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் மற்ற முன்னணி நடிகர்களை காட்டிலும் நடிகர் அஜித்திற்கு குறைவு என்பதுதான் உண்மை. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தோல்வி படங்கள் என்றாலும் கூட படத்தின் பட்ஜெட்டை எப்படியாவது எட்டிப் பிடித்துவிடும்.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு நட்டம் என்ற சூழ்நிலை வருவது எளிதான விஷயம் கிடையாது.  ஆனால், அஜித்திற்கு அப்படி கிடையாது படம் தோல்வி என்றால் படத்தின் பட்ஜெட்டை எடுப்பது குதிரைக் கொம்பாகி விடும். அந்த வகையில் தோல்வியை தழுவி தயாரிப்பாளருக்கு நட்டத்தை தன்னுடைய படம் ஏற்படுத்தினால் அடுத்த ஒரு படத்தை சம்பளமே வாங்காமல் நடிகர் அஜித் நடித்துக் கொடுப்பார் என்பது உலகம் அறிந்த விஷயம்.

தன்னால் யாரும் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் நடிகர் அஜித் படங்கள் தோல்வி அடைந்தால் அடுத்த ஒரு படமோ அல்லது இரண்டு படமோ அந்த தயாரிப்பாளருக்கு குறைந்த சம்பளத்தில் அல்லது பாதி சம்பளத்தில் நடித்து கொடுத்து அந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அந்த மினிமம் கேரண்டி என்ற அமைப்பு இருக்கின்றது என்றுதான் கூறவேண்டும். இவருடைய படங்கள் தோல்வி என்றாலும் குழந்தைகள் குடும்பங்கள் இவருடைய படங்களை இரண்டாவது வாரம் முதல் மூன்றாவது வாரம் வரை கட்டி இழுத்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் AK61 திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கி உள்ளதால் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி நிச்சயமாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வரும் தீபாவளிக்கு விஜய் அஜித் கமல் ரஜினி என திரையுலக ஜாம்பவான்கள் படங்கள் நிச்சயமாக இந்த தீபாவளிக்கு வெளியாகும் சாத்தியக்கூறுகள் கிடையாது இதனால் இந்த வாய்ப்பை தனதாக்கி கொள்ள நடிகர் சிவகார்த்திகேயன் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வருகின்றார்.

தன்னுடைய பிரின்ஸ் திரைப்படத்தை எப்படியாவது தீபாவளிக்கு வெளியீடு 200 கோடி கிளப் நடிகர்கள் படத்தில் இணைந்துவிட வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தற்போதைக்கு படங்களில் விளம்பரத்தில் கவனம் செலுத்தாமல் படத்தின் வியாபாரத்தில் கவனம் தந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கூடுமானவரை திரையரங்குகளை புக் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது 50% திரைகளை தன்னுடைய தொடர்புகளைக் கொண்டு புக் செய்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.

நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த தில்லாலங்கடி யுக்தி சினிமா வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“டேய்.. வலிக்குதுடா..”-ன்னு கடைசியா சொன்னார்.. – மனோபாலா-வின் இறுதி நிமிடங்கள்.!

இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் மனோபாலா [Manobala] தமிழ் உள்ளிட்ட …