“ஒன்னு போதும் நின்னு பேசும்..” – மூக்குத்தி அம்மன் ஸ்மிருதி வெங்கட் டாப் ஆங்கிளில் கிளுகிளு போஸ்..!

சென்னையை சேர்ந்த இளம் நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா கூட்டணியில் வெளியான மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மனநிலை, குற்றம் குற்றமே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

படங்களில் குடும்பப்பாங்கான ஆகவே தோன்றும் இவர் இதுவரை கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து கிடையாது. என்றாலும் கூட தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒன்று போதும் நின்று பேசும் என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஹீரோயினாக நடித்தால் போதும் என்று நான் கதைகளைக் கேட்பது கிடையாது. என்னுடைய கதாபாத்திரத்திற்கு கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் கதை வலுவானதாக இருக்க வேண்டும் ரசிகர்கள் பிடித்தமானதாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த படத்தில் நான் ஒப்புக் கொள்வேன்.

---- Advertisement ----

அதிக எண்ணிக்கையில் படங்களில் நடித்துவிட்டு நான் இத்தனை படங்களில் நடித்து இருக்கிறேன் என்று பெருமை பேசிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு படத்தில் நடித்திருந்தால் கூட இந்த படத்தில் அவர் நடித்திருந்தார் இந்த காட்சியில் நடித்திருந்தார் என்று மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும்.

அப்படியான படங்களை மட்டுமே நான் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறேன் என்று கூறுகிறார் நடிகை ஸ்மிருதி வெங்கட். இவர் கூறியது போலவே இவர் நடித்த அனைத்து படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்திருக்கின்றன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

---- Advertisement ----