நடிகை சினேகா கடந்த 2000ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்கனே ஒரு நில பக்ஷி என்ற ஒரு திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சுசிகணேசன் இயக்கத்தில் வெளியான விரும்புகிறேன் திரைப்படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
ஆனார் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்த என்னவளே என்ற திரைப்படம் முதலில் ரிலீஸ் ஆனது. எனவே என்னவளே திரைப்படம்தான் நடிகை சினேகாவின் முதல் தமிழ் திரைப்படம் என்று கூற வேண்டும்.
அதன் பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஆனந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. நடிகை சினேகாவின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது இந்த படம்.
அதன் பிறகு பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் 8 படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை சினேகா.
கடந்த 2009ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் கதாநாயகன் நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டபோது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.
தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தயாகியிருக்கிறார் நடிகை சினேகா. நட்சத்திர தம்பதியாக வலம் வரும் நடிகை சினேகா பிரசன்னா ஆகிய இருவரும் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது சுற்றிலும் பனி சூழ்ந்த இடத்தில் நடிகை சினேகா தன்னுடைய குடும்பத்துடன் குதுகாலமாக இருந்த தருணங்களை புகைப்படமாக வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அம்மணி.