குடும்ப பாங்கினி போன்ற முகம் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக குறுகிய காலத்திலேயே முன்னேறியவர் நடிகை சினேகா. தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சினேகா தொடர்ந்து சூர்யா விஜய் அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தன்னுடைய இந்திய நடிகை சினேகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். குடும்ப பாங்காக நடித்தாலும் காலங்கள் செல்ல செல்ல கவர்ச்சி நாயகியாக உருவெடுத்த நடிகை சினேகாவை பற்றி பலவிதமான சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் ஓடிக்கொண்டிருந்தது.
குறிப்பாக துணிக்கடை அதிபர் ஒருவருடன் நடிகை சினேகா நெருக்கமாக இருப்பதாக கிசு கிசு பரவிக்கிடந்தது. அதெல்லாம் உண்மை கிடையாது என்று சொல்லும் விதமாக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா.
இவருடைய திருமணத்திற்கு பிறகு இவரை சுற்றியிருந்த கிசுகிசு இப்படியான வதந்திகள் எல்லாம் அடங்கி போனது. தற்போது இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கும் நடிகை சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறார்.
அதற்காக உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தை மாறி இருக்கும் நடிகை சினேகா திரைப் படங்களில் ஹீரோயினாக மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஏற்று நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் போல தெரிகிறது.
தொடர்ந்து சினிமாவில் பயணிக்கிறார் நடிகை சினேகா என்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் இருக்கக்கூடிய ஒரு விஷயம். சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக தன்னை இணைய பக்கங்களில் ஆக்டிவாக வைத்திருக்கும் நடிகை சினேகா இளம் நடிகையான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
வயதானாலும் உங்களுடைய ஸ்டைலும் அழகும் மாறவில்லை என்று படையப்பா நீலாம்பரி கூறுவதுபோல சினேகாவின் அழகை வர்ணித்து வருகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் உடலோடு ஒட்டிய உடையில் நடிகை சினேகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளாமர் குயின் என்று வர்ணிக்கின்றனர்.