நடிகை சினேகா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தளவுக்கு இளமையுடன் இருக்கிறார் நடிகை சினேகா.
சேட்டின் துணியால் ஆன சட்டையை அணிந்துகொண்டு பளபளவென இருக்கும் நடிகை சினேகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
90ஸ் கிட்ஸ் மத்தியில் புன்னகை அரசி என்ற பெயரை எடுத்தவர் நடிகை சினேகா. தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது பல விளம்பர படங்களில் நடித்திருக்கும் நடிகை சினேகாவை பற்றி ஒரு வதந்தியை கிசுகிசுவும் ஏதாவது ஒரு சர்ச்சை சுற்றிக்கொண்டே இருக்கும். அதில் முக்கியமான ஒரு சர்ச்சையான வதந்தி என்றால் சினேகாவுக்கும் பிரபல துணிக்கடை அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூட தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதுகுறித்து நடிகை சினேகா எந்த இடத்திலும் பதிலை கூறியது கிடையாது பேசியதும் கிடையாது. இப்படியே போய்க் கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.
பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு தான் நடிகை சினேகா மற்றும் துணிக்கடை அதிபருமான இந்த பேச்சுகள் அடங்கியது. குறுகிய காலத்திலேயே விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை சினேகா நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
குடும்பப்பாங்காக நடித்து வந்த நடிகை சினேகாவுக்கு இந்த நிலைமையா..? இது என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு உடல் எடை தாறுமாறாக ஏறி குண்டாகி போன நடிகை சினேகா தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் சினேகா தற்போது சாட்டின் துணியினாலான சட்டை அணிந்து கொண்டு வலை போன்ற துணியால் ஆன பாவாடை அணிந்து கொண்டு சிலை போல நிற்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.