இந்த நீதிமன்றம் பல்வேறு விசித்திரமான வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்ற ஒரு வசனம் நிறைய படங்களில் இடம் பெற்று இருக்கிறது.
அந்த வகையில் விசித்திரமான ஒரு ரொமான்ஸ் கதை தற்போது கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது,
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக ஹீரோ, வில்லன், காமெடி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான அந்த இரவு நடிகர் பல்வேறு முன்னணி ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இரவு நடிகரின் மகன் கடந்த சில வருடங்களாக சினிமாவில் பிஸியாக நடித்த வருகிறார். இரவு நடிகரின் மகன் என்றாலும் தன்னுடைய அடையாளத்தை எங்கும் காட்டிக் கொள்ளாமல் தனியாக போராடி வருகிறார்.
பலருக்கும் இரவு நடிகரின் மகன் என்றே தெரியாது. அந்த அளவுக்கு தன்னுடைய அப்பாவின் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் சாமர்த்தியமாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
ஆனால், சமீபத்தில் முத்தான படத்தில் நடிக்கும் போது குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த நடிகையுடன் நெருக்கமான அவர் அவருடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றி வருகிறார் என்று கூறுகிறார்கள்.
வயதாகிவிட்டாலும் கூட தற்போதும் இளம்பெண் போலவே இருக்கும் அந்த நடிகையின் கட்டுப்பாட்டில் தற்போது மகன் இருக்கிறாராம்.
ஒரு காலத்தில் தன்னுடைய அப்பாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை என்றும் பாராமல் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம் மகன் நடிகர்.
பையனோட எதிர்காலம் வேற லெவல்ல இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தால் இந்த மேட்டரில் படு வீக்காக இருக்கிறாரே.. தம்பி அந்த பொண்ணு உங்க அப்பா செட்டுப்பா… என்று உதட்டை சுளிக்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.
மேலும் இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.