தனுஷிடம் அது இருக்கு.. செல்வராகவனிடம் இல்லை.. – விவாகரத்து குறித்து ஒப்பனாக பேசிய சோனியா அகர்வால்..!

நடிகை சோனியா அகர்வால் எதனால் செல்வராகவனை பிரிந்தேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

கடத்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன்-ஐ சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்டனர்.

நான்கு ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இருவரும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இது குறித்து சோனியா அகர்வால் கூறுகையில், இப்போது நிறைய விவாகரத்துகள் நடக்கின்றன. முன்பு மக்களிடையே அனுசரிப்பு இருந்தது. தற்பொழுது ஒவ்வொருவரும் தங்களுடைய இடம், சுதந்திரம், மற்றும் விருப்பங்களை தேடுகிறார்கள்.

பல முறை தீர்க்க முயன்றும் முடியாது என்பதால் விவாகரத்து பெற்று விட முடிவு செய்தேன். எனக்கு ஆர்வம் இல்லை. அதனால் சூழ்நிலைகள் தாங்க முடியாதவை. அவர் மிகவும் முரண்பட்டவராக இருந்தார்.

குறிப்பாக காதல் கொண்டேன் படத்தில் நான் நடிக்க வந்தபோது என்னுடைய அம்மா என்னுடன் இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் தனுஷின் தோற்றத்தையும் வேடத்தையும் பார்த்த என்னுடைய அம்மாவுக்கு தனுஷை சுத்தமாக பிடிக்கவில்லை.

ஏனென்றால் அந்த நேரத்தில் அம்மாவால் அப்படிப்பட்ட திரைப்படங்களை உள்வாங்க முடியவில்லை. முதல் நாளே படப்பிடிப்பு தளத்தில் மிகவும் டென்ஷனாக இருந்தார் என்னுடைய அம்மா.

செல்வராகவனுக்கு எல்லாமே கச்சிதமாக இருக்க வேண்டும். சிறு தவறு நடந்தால் கூட கடுமையாக கோபப்படுவார். எனக்கும் அதனால் கோபம் வந்துவிடும்.

அப்போதெல்லாம் சமாதானம் கூட செய்ய மாட்டார். ஆனால் நடிகர் தனுஷ் என்னிடம் வந்து அமைதிப்படுத்தி இருக்கிறார். என்னுடைய கோபத்தை குறைத்து இருக்கிறார். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொல்லும் குணம் அவரிடம் இருக்கிறது. ஆனால், செல்வராகவனிடம் அது கிடையாது என பேசியிருக்கிறார் நடிகை சோனியா அகர்வால்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …