Connect with us

ஆன்மிகம்

சனி விலக இதை செய்யுங்கள்.. புரட்டாசி மாதத்தின் மகிமைகள்..! செல்வம் கொடுக்கும் பூஜைகள்..!

By Madhu VKSeptember 28, 2024 12:17 PM IST

இந்து மத வழிபாட்டில் மிக மிக முக்கிய மாதமாக புரட்டாசி மாத வழிபாடு இருந்து வருகிறது. ஏனெனில் புரட்டாசி மாதம் மிக முக்கியமாக மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.

இதனால் பெருமாளை போற்றி வணங்கும் ஒரு மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது. மேலும் புரட்டாசி மாதத்தில் எந்த ஒரு சாமிக்கு விரதம் இருந்தாலும் அது சக்தி வாய்ந்த விருதமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சாமிக்கு உகந்த மாதமாக இருக்கிறது. ஆடி மாதம் அம்மனுக்கு ஏற்ற மாதம் என்றால் புரட்டாசி மற்றும் மார்கழி இரண்டுமே பெருமாளுக்கு உரிய மாதங்கள் ஆகும். இந்து கடவுள்களிலேயே சிறப்புக்குரிய ஒரு தெய்வமாக பெருமாள் இருப்பதால் அவரைப் போற்றி வணங்குவதில் பக்தர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏன் சைவம் சாப்பிட வெண்டும்:

ஏன் புரட்டாசி மாதத்தில் மட்டும் சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பலரது கேள்வியாக இருக்கும். ஒரு மாதம் முழுக்க சைவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய எண்ணங்கள் சாத்வீகமான எண்ணங்களாக மாறும்.

#image_title

அப்படியான எண்ணங்கள் இருக்கும் பொழுது அதிகமாக கோபம் அடைய மாட்டோம். மேலும் பெருமான் ஸ்ரீ நாராயணனை வணங்குவதற்கு அந்த எண்ணங்கள் நமக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்பது ஐதீகம். ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் சிறப்பு விரதங்கள் புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படுகின்றன.

சனிக்கிழமையின் மகிமை:

ஏனெனில் சனி பகவான் பிறந்த தினம் தான் புரட்டாசி சனிக்கிழமை. ஆனால் அந்த தினம் என்பது அனைவருக்கும் அச்சத்தை கொடுக்கும் ஒரு தினமாக இருந்து வந்தது. ஒரு முறை சனி பகவான் உலகிலேயே தான் மட்டுமே பெரிய சக்தி என்கிற ஒரு அகங்காரத்திற்கு வந்துவிட்டார்.

 

அதோடு நின்றுவிடாமல் ஸ்ரீமன் நாராயணனிடமே சென்று இதற்காக சண்டையிட்டு இருக்கிறார். மேலும் ஆணவம் அதிகரிக்க காரணத்தினால் வேங்கடப் பெருமானின் புனித ஸ்தலமான திருமலையில் கால் வைத்தார் சனி பகவான்.

விசேஷ பிரதோஷ தினம்:

இதனால் கோபமடைந்த ஸ்ரீனிவாசன் அடுத்த நிமிடம் சனீஸ்வரரை திருமலையில் இருந்து தூக்கி வீசினார். பிறகு தன்னுடைய தவறை உணர்ந்த சனி பகவான் மகாவிஷ்ணுவை வணங்கி இந்த பாவத்திற்கு விமோசனம் வேண்டும் என்று பெருமாளிடம் கேட்டார்.

தொடர்ந்து பெருமாள் ஒரு விஷயத்தை சனி பகவானுக்கு வழங்கினார் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் என்னை வழிபடுபவர்களுக்கு சனி தொல்லை இருக்கக் கூடாது. சனி தொல்லை இருப்பவர்களும் அதிலிருந்து மீள வேண்டும் என்று கூறினார்.

#image_title

#image_title

இதனால் தான் சனிக்கிழமை சிறப்பு விரதம் அமர்ந்து புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கிறோம்

புரட்டாசி மாதத்தில் இன்னும் ஒரு சிறப்பான நாள் என்றால் அது சனி மகா பிரதோஷம் ஆகும். பொதுவாக எல்லா மாதங்களிலும் பிரதோஷம் என்பது வரக்கூடிய ஒரு தினமாகும். சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் முக்கியமான ஒரு நாளாக பிரதோஷம் இருந்து வருகிறது.

ஆனால் பெருமாளுக்கு உகந்த நாளான புரட்டாசி மாதத்தில் வரும் இந்த பிரதோஷம் என்பது மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. அதிலும் குறிப்பிட்டு சனிக்கிழமையில் ஒரு பிரதோஷம் புரட்டாசி மாதத்தில் வருகிறது என்றால் அதுதான் சனி மகாபிரதோஷம்.

எல்லா வருடமும் இந்த பிரதோஷம் வந்து விடாது மிக அரிதாக எப்போதாவது இந்த பிரதோஷம் வரும் சனி பகவான், சிவப்பெருமான், ஸ்ரீமன் நாராயணன் மூன்று பேருக்கும் உகந்த ஒரு நாளாக இந்த பிரதோஷம் இருப்பதால் இந்த ஒரு நாளில் விரதம் இருப்பதன் மூலம் மூன்று தெய்வங்களையும் மகிழ்விக்க முடியும் என்பது முன்னோர்கள் சொல்லாக உள்ளது. இந்த நாளில் செய்யும் பூஜை செல்வத்தை பெருக்க உதவுகிறது என்பது ஐதீகம்.

 

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top