தினமும் கடவுளிடம் எத்தனையோ விஷயங்களை சொல்லி வேண்டுதல்களை வைக்கிறோம். முறையிடுகிறோம். உதவி கேட்கிறோம். நமக்குள் இருக்கும் மன கவலைகளை சொல்லி நம்முடைய மன பாரத்தை இறக்கி வைக்கிறோம்.
இதையெல்லாம் செய்யும் போது.. இவற்றையெல்லாம் கடவுள் கேட்கிறாரா..? இல்லையா..? என சந்தேகம் பலருக்கும் இருக்கும். அந்த சந்தேகம் எதுவும் இல்லாமல் கடவுள் நாம் சொல்வதை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை ரத்தமும் சதையுமாக நம்புவது தான் பக்தி.ஒரு வேளை கடவுள் மீது சந்தேகமோ.. கடவுள் இல்லை என்ற புரிதலுக்குள்ளோ நீங்கள் வந்துவிட்டால் கடவுளை விட்டு நீங்கள் நீண்ட தூரம் சென்று விட்டீர்கள் என்று பொருள்.
உலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் கூட சிலரை மட்டுமே கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார் என குறிப்பிடுகிறோம். ஆம், கடவுளிடம் பேசும் மனிதர்கள் பல பேர் இருந்தாலும். தன்னால், தேர்வு செய்யப்பட்ட மனிதர்களிடம் கடவுளும் பேசுகிறார்.
அப்படிப்பட்ட மனிதர்களுடன் கடவுள் பேச விரும்புவார் என எல்லா மதத்தையும் சேர்ந்த முன்னோர்கள் செல்கின்றார்கள். கடவுள் நம்முடன் இருக்கிறார் அவர் நம்முடன் பேச விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அவற்றை ஒவ்வொன்றாக இந்த பதிவில் பார்ப்போம்
அதிகாலை விழிப்பு
அதில் முதலாவது அறிகுறி அதிக அளவில் யாரோ ஒருவர் உங்களை எழுப்பி விடுவது போல உணர்வு ஏற்பட்டு அதிகாலை 03:00 முதல் 04:30 மணிக்குள் நீங்கள் விழித்துக் கொள்கிறீர்கள் என்றால் கடவுள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார் என்று அர்த்தம். அந்த நேரத்தில் விழிப்பு என்பது இயற்கையாக நடக்க வேண்டும். அலாரம் வைத்தோ.. அல்லது உங்களுடன் இருப்பவர் யாராவது ஒருவர் எழுப்பியோ.. நடக்கக்கூடாது.
எந்தவித சோம்பலும் இல்லாமல் அதிகாலை 3 மணி முதல் 4:30 மணிக்குள் நீங்கள் தூக்கம் எழுந்து உங்கள் பணிகளை செய்ய தொடங்குகிறீர்கள் என்றால் உங்களுடன் கடவுள் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார் என்று அர்த்தம்.
பிறரின் நிலை காணுதல்
எப்போது நீங்கள் உங்களுக்கு எவ்வளோ கஷ்டங்கள் இருந்தாலும் அதனை பெரிதாக நினைக்காமல். மற்றவர்களின் கடினமான சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்கள் மீது இரக்கமும்.. அவர்கள் கொண்டுள்ள மன வலியையும் உணர்கிறீர்களோ.. நீங்கள் உங்கள் ஆன்மாவை விழிப்பு நிலையில் வைத்து இருக்கிறீர்கள்/ இறைவன் உங்களை தொடர்பு கொள் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதற்கு அறிகுறி.
யுகத்தை யூகித்தால்
ஒரு விஷயம் நடப்பதற்கு முன்பு அந்த சூழலில் அந்த நபர் எப்படி எல்லாம் நடந்து கொள்வார். என்னவெல்லாம் பேசுவார். அந்த சூழ்நிலையின் விளைவு எப்படி இருக்கும். அந்த நிகழ்ச்சி எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்கள் ஆழ்மனதில் இயற்கையாக ஒரு யூகம் தோன்றுகிறது.. அந்த யூகம் சரியாக இருக்கிறது என்றால் கடவுள் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
கெட்ட கனவு
பெரும்பாலானோர் தூங்கி எழுந்த சில மணி நேரங்களில் தங்களுடைய கனவுகளை மறந்து விடுவார்கள். ஆனால், அப்படி அல்லாமல் கனவுலகில் தாங்கள் கண்ட கனவை மறக்காமல் நிஜ உலகத்திலும் நீங்கள் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் கடவுள் உங்களுக்குள் இருக்கிறார். தெளிவான மனநிலையில் நீங்கள் பயணிக்கிறீர்கள். உங்களை விடவும் மேலான ஒரு சக்தி உங்களை வழிநடத்துகிறது என்பதற்கு இது அறிகுறி.
நேர்மாறான உணர்வு
உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத போதும் உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதாக உணர்வு. சுற்றி யாருமே இல்லாத போது யாரோ உங்களுடன் ஒருவர் இருக்கிறார் என்பது போன்ற உணர்வு. சுற்றி நிறைய பேர் இருந்தும் யாருமே உங்களுடன் இல்லை என்பது போன்ற உணர்வு. இப்படி விசித்திரமான உணர்வுகள் உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் கடவுள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார். குறிப்பாக உங்களுடைய குலதெய்வம் உங்களை தன்னுடைய மண்ணில் உங்கள் கால் பாதம் பட அழைக்கிறது என்பதற்கான அறிகுறி.
கனவு
அடிக்கடி பயங்கரமான கனவுகள். ஆபத்தான கனவுகள். கனவில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களை காண்கிறீர்கள் என்றால் பயம் கொள்ளாதீர்கள். கனவில் பாம்பை கண்டால் என்ன பலன் என்று இணைய பக்கங்களில் கிறுக்கப்பட்டிருக்கும் தவறான தகவல்களுக்கு ஆட்படாதீர்கள். உங்களை பய உணர்விலிருந்து விடுபட்டு வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் தெய்வீக சக்தியின் முயற்சி தான் இது என்பதை உணருங்கள். மேலும் நம் வீட்டில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் இப்படியான செயல்களில் ஈடுபட்டு நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
தனிமை
நீங்கள் தனிமையை விரும்புகிறீர்கள் தனியாக இருப்பதையே சுகமாக அனுபவிக்கிறீர்கள். எங்கு சென்றாலும் தனியாகவே உங்களால் சென்று வந்து விட முடியும் என்று இருக்கிறீர்கள் என்றால் உங்களுடன் உங்கள் உள் உணர்வு இணைந்து செயல்படுகிறது. உங்களுடன் உங்கள் ஆன்ம சக்தி துணை இருக்கிறது என்று அர்த்தம். மேலும், உங்களுடைய உயிர் பேசும் குரலை கேட்டு அதற்கு நீங்கள் பதில் அளிக்க விரும்புகிறீர்கள். அடிக்கடி உங்களுக்கு நீங்களாகவே கேள்வியை எழுப்பி கொள்கிறீர்கள். அதற்கு பதிலையும் கொடுக்கிறீர்கள் என்று சொன்னால் இறைவனை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால் இறைவனை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
திட்டமிடுதல்
எவ்வளவு பெரிய நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் அந்த சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுகிறீர்கள். அப்படியான சூழ்நிலை நிஜத்தில் வரும் போது திடமாகவும் வலிமையாகவும் எதுவும் நடக்காதது போல எளிமையாக உங்களை அந்த பிரச்சனையிலிருந்து கடத்தி செல்ல முடிகிறது என்றால் தெய்வீக சக்தி உங்களுக்குள் ஆழமாக வேர் ஊன்றி இருக்கிறது என்று பொருள்.அப்படி கடினமான சூழ்நிலை உங்களை மேலும் வலுவடைய வைக்கிறது.
நன்றியுடன் அணுகுதல்
இந்த விஷயம் உங்களுக்குள் இயற்கையாகவே இருக்கிறதா என்பதை யோசித்துப் பாருங்கள். சிறு சிறு விஷயங்கள் கூட நன்றி தெரிவித்து பழகுகிறீர்களா? பெரிய பெரிய விஷயங்கள் மட்டும் இல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நன்றி உணர்வுடன் நன்றி கூறுகிறீர்களா. எதிரில் அந்த சிறு உதவியை செய்தவர் கடவுள் அனுப்பிய நபர் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறதா..? எனில் தெய்வீக சக்தி உங்களுடைய வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Loading ...
- See Poll Result