ஓடி ஓடி விளையாடு

இன்றைய தலைமுறைக்கு விளையாட்டு என்றால் என்ன என்று கேட்டால்  கணினியில் விளையாடக்கூடிய விளையாட்டுக்களை கூறுவார்கள் இவ்வாறு கணினியில் அவர்கள் அமர்ந்து போது மன ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உடல் பருமனும் அதிகரித்து வருவது  உலகளாவிய ஒரு பிரச்சனையாகவே உள்ளது என்று கூறலாம்.

 உடன் கூட விளையாட ஆட்கள் இல்லாமல் எந்நேரமும் கணினியின் ஒரே விளையாட்டு யாரிடமும் பேசாமல் அமைதியாக ஏதோ ஒன்றை வலைதளங்களில் பார்த்துக் கொண்டிருப்பது இவையெல்லாம்  அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்கு  ஏற்றதல்ல. எனவே  அவர்களை விளையாட விடுவது மிகவும் அவசியமானது ஆட்கள் இல்லை எனில் நீங்களே அவர்களுடன் உரையாடும் போது ஏற்படக்கூடிய உடலியல் மாற்றங்களை நாம் அளவிட்டுக் கூற முடியாது.

அவசியம் விளையாடுங்க

விளையாட்டு அவசியம் தான் நீங்கள் அவர்களுடன் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது உடலில் உள்ள வியர்வை வெளியேறும் படி விளையாட வேண்டும். அப்போது தான் உண்ட உணவு செரித்து மிக அற்புதமான ஜீரணசக்தியை நமது ஜீரண மண்டலம் பெறமுடியும்.

---- Advertisement ----

 விளையாட்டின் மூலம் அதிக அளவு தன்னம்பிக்கை அவர்களுக்குள் உற்பத்தியாகி வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

நீங்களும் அவர்களோடு சேர்ந்து விளையாடும் போது உங்களுக்குள் ஒரு புரிதல்  ஏற்படும். இதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்.பந்த பிணைப்பு அதிகமாகும்.

 உங்களுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் இருக்க  உடற்பயிற்சியோடு விளையாட்டும்  உதவி செய்யும்.

 ஓடும்போது நடக்கும்போது அவன் கீழே விழுந்து விட்டால் நீங்கள் எடுத்துவிட வேண்டாம் அவனாகவே எந்திரித்து என்ன செய்ய வேண்டுமென்பதை அவனாகவே நிர்ணயிக்கக் கூடிய பக்குவம் குழந்தைகளுக்கு தானாகவே கிடைக்க விளையாட்டு உறுதுணையாக உள்ளது அது மட்டுமல்லாமல் அவர்களின்  கூடுதல் திறன் மேம்படுகிறது.

மன அழுத்தம், மன இறுக்கம் நீங்கி அவர்கள் மனம் புத்துணர்வு அடைகிறது. இதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய இது உதவுகிறது.

ஓடி ஓடி விளையாடு ஓய்வு நேரத்தில் விளையாடு என்பதை மறவாதீர்கள்.

எனவே பிள்ளைகளை ஓடியாடி விளையாட ஊக்கப்படுத்துங்கள் அதைவிடுத்து அலைபேசிக்கு அடிமையாகாதீர்கள்.

---- Advertisement ----