Connect with us

மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார் டேவிட் மலான்..!!!

Ban vs Eng, david malan, odi cricket

Sports | விளையாட்டு

மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார் டேவிட் மலான்..!!!

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், டேவிட் மலான் அணி இக்கட்டான நிலையில் இருந்த போதும் தனது அணியை அபார வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

டேவிட் மலான்… எந்த நேரத்திலும் போட்டியை மாற்றும் திறன் கொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன். மலான் மீண்டும் ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடி கிரிக்கெட் உலக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

Ban vs Eng, david malan, odi cricket

மலனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது நான்காவது ஒருநாள் சதம். இந்தப் போட்டியில் அவர் 145 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் எடுத்தார். மாலன் மொத்தம் 8 பவுண்டரிகள்-4 சிக்ஸர்கள் அடித்தார். இந்த சதத்தின் மூலம் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்தார்.

டேவிட் மலான் உலகின் இரண்டாவது பேட்ஸ்மேன் ஆனார்:

உலகின் அதிவேகமாக நான்கு ஒருநாள் சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை டேவிட் மலான் பெற்றார். 16வது ஒருநாள் போட்டியில் தான் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 4 சதங்கள் அடித்த சாதனையை பாகிஸ்தான் பேட்ஸ்மேன் இமாம் உல் ஹக் பிடித்திருந்தார், அவர் இந்த சாதனையை வெறும் 9 இன்னிங்ஸ்களில் செய்துள்ளார்.

Ban vs Eng, david malan, odi cricket

ஃபகார் ஜமானின் சாதனையை முறியடிக்கலாம்:
மலான் தற்போது 16 ஒருநாள் போட்டிகளில் 758 ரன்கள் எடுத்துள்ளார். மலான் தனது அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் 242 ரன்கள் எடுத்தால், அவர் மற்றொரு பெரிய சாதனையைப் படைப்பார். இந்த ரன்னை அடித்தவுடன் மலான் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரராக முடியும். இதுவரை இந்த சாதனை பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஃபகர் ஜமான் முதலிடத்தில் உள்ளார். ஜமான் 18 போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார்.

இருப்பினும் மாலனின் பேட்டில் இருந்து அதிரடி ரன் மழை பொழிவதை பார்த்தால் விரைவில் புதிய சாதனை படைக்க முடியும் என்றே கூறலாம். சமீபத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 118 ரன்களை விளாசினார் மலான். தற்போது ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்து வருகிறார்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் மலான் 92 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுறிந்த நிலையில்
மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கியரை மாற்றி 134 பந்துகளில் சதம் அடித்து இங்கிலாந்து ஆணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று உள்ளார்.

Ban vs Eng, david malan, odi cricket

மலனின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் அபாரமாக பந்துவீசி 10 ஓவர்களில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெஹிதி ஹசனும் அபாரமாக பந்துவீசினார். 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 3ம் தேதி நடக்கிறது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top