Connect with us

தேர்வுக்குழுவினர் மீது கவாஸ்கர் காட்டம்.. தோல்விக்கு காரணமே இவங்க தான் என புகார்..!!

gavashkar, indian cricket team, test cricket

Sports | விளையாட்டு

தேர்வுக்குழுவினர் மீது கவாஸ்கர் காட்டம்.. தோல்விக்கு காரணமே இவங்க தான் என புகார்..!!

தேர்வுக்குழுவினர் மீது கவாஸ்கர் காட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்டில் சிறப்பான முறையில் பதிலடி கொடுத்து வெற்றி பெற்றது.gavashkar, indian cricket team, test cricket

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை அகமதாபாத்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த நிலையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீது சுனில் கவாஸ்கர் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.இது குறித்து பேசிய அவர் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் பல வீரர்கள் குறித்து பேசி வருகிறார்கள். சிலர் ஆடுகளம் குறித்து பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க :  ஷேன் வார்ன் பற்றி டிவிட் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்கள்..!!

gavashkar, indian cricket team, test cricket

ஆனால் உண்மையிலே அவர்கள் தாக்க வேண்டியது ஆஸ்திரேலிய தேர்வு குழுவினரை தான். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கு முழு உடல் தகுதி பெற முடியாத நிலையில் தேர்வு குழுவினர் எப்படி ஸ்டார்க் மற்றும் கேமரான் கிரீனை தேர்வு செய்தார்கள்.இரண்டு டெஸ்ட் போட்டி என்பது பாதி தொடர் போய்விட்டது. மூன்று வீரர்கள் இல்லை என்றால் வெறும் 13 வீரர்களை வைத்து எப்படி ஒரு அணி தேர்வு செய்ய முடியும். அதன்பிறகு மேத்தீவ் குஹான்மேனை தேர்வுக்குழுவினர் ஆஸ்திரேலியாவில் இருந்து வர வைத்திருக்கிறார்கள்.

gavashkar, indian cricket team, test cricket

ஏற்கனவே இதே போன்று ஒரு வீரர் அணியில் இருக்கிறார். அணியில் இருந்த வீரர் சரியில்லை என தெரிந்தால் அவரை ஏன் முதலில் நீங்கள் தேர்வு செய்தீர்கள். இதன் மூலம் வெறும் 11, 12 வீரர்களை வைத்துதான் ஆஸ்திரேலியா முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆஸ்திரேலிய தேர்வு குழுவினருக்கு பொறுப்பு என்று ஏதாவது ஒன்று இருந்தால், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top