Sports | விளையாட்டு
சென்னை சேப்பாக்கத்தில் தல தோனி என்டரி..!! தலையை பார்க்க குவிந்த ரசிகர்கள் படை..!!
சென்னை சேப்பாக்கத்தில் தல தோனி என்டரி:16வது ஐபிஎல் சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சியில் பங்கேற்பதற்காக எம்எஸ் தோனி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிஎஸ்கே அணியின் இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவதற்காக தோனி இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்றார். அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர், மேலும் அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் வர வாய்ப்பு இருப்பதால் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு வாரம் பயிற்சியில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது, எனவே அவர் அங்கு இருப்பதால் அவரைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!