இறங்கி வந்த நடிகை ஸ்ரீ திவ்யா..! – திகட்ட திகட்ட கிளாமர் ட்ரீட்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா ( Sri Divya ).சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருதப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஸ்ரீ திவ்யா, தொடர்ந்து அவருடன் காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ திவ்யா, சிறு வயது முதலே தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். 1993ம் ஏப்ரல் 1ம் தேதி பிறந்த ஸ்ரீ திவ்யா கடந்த 2000ம் ஆண்டு தனது 7 வயதிலேயே கேமரா முன்னாடி நடிக்க வந்துவிட்டார்.

ஹனுமான் ஜங்சன், யுவராஜா, வீடே உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.2010ம் ஆண்டு டோலிவுட்டில் ரிலீசான மானசரா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா

தமிழில் 2013ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் லதா பாண்டி ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது.இந்நிலையில் இவர் தமிழில் வந்த பட வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு தனக்கு அதிகம் முக்கியதுவம் அளிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க சென்றார்.

ஆனால் அங்கு நடித்த எல்லா படங்களும் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வந்தார்.

வாய்ப்பு இல்லை

ஆனால், அவர் வந்த நேரம் ஸ்ரீ திவ்யாவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிட்டவில்லை. முன்னணி நடிகைகள் தற்போது வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளனர்.

 

திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு சம்பளம், சென்சார் இல்லை என்பதால் இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடுகிறார்கள். நடிகைகள் நித்யா மேனன் மற்றும் அஞ்சலி ஆகியோர் கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டனர்.

இப்படி முன்னணி நடிகைகளை அப்படி இப்படி காட்சியில் நடிக்க வைப்பது படத்தின் விளம்பரத்திற்கு கூடுதல் ப்ளஸ் பாய்ண்டாக இருப்பதால் இயக்குனர்கள் பிரித்து மேய்கிறார்கள்.

பிகினியில் ஸ்ரீதிவ்யா

பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஸ்ரீ திவ்யா தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ள இந்த படத்தில் முதன்முறையாக பிகினி உடையில் ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளாராம்.

இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் கசிந்த இந்த தகவலால் அவரது ரசிகர்கள் ஆடிப்போய் கிடக்கிறார்கள்.

நீங்க படமே நடிக்கவில்லை என்றாலும் பராவயில்லை பிகினியில் எல்லாம் நடிக்காதிங்க என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். மேலும், சிலர் கத்திரிக்கா முத்தினா கடைக்கு வந்துதானே ஆகணும் என நமட்டு சிரிப்பு சிரித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …