தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் பொதுவாக ரீமேக் படங்களில் நடிக்கும் பொழுது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
ஏனென்றால், ஏற்கனவே உள்ள ஒரு திரைப்படத்தை இன்னொரு மொழியில் உருவாக்கும் பொழுது அந்த திரைப்படத்தில் இருந்த உண்மைத்தன்மை அதனுடைய பாதிப்பு எதுவுமே இதில் குறைந்த விடக்கூடாது.
ஆனால், சில இயக்குனர்கள் அந்த படத்தை எடுத்துக் கொண்டு கமர்சியல் எலமெண்ட்களை சேர்க்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாத சண்டை காட்சிகள் பண்ணனும்.. செ*ஸ் பாடல்கள் பண்ணனும்.. ரொமான்ஸ் காட்சிகளை வைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பார்கள்.
ஆனால், நான் நடித்த ரீமேக் படங்களில் எதுவும் இப்படியான பிரச்சினைகள் வந்ததில்லை. ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும் பொழுது அதனுடைய உண்மை தன்மை மாறாமல் அப்படியே எடுத்தால் அதே பாதிப்பு இந்த மொழியிலும் இருக்கும்.
ஒருவேளை, உள்ளே ஏதாவது அவர்கள் மாற்றம் செய்ய நினைக்கிறார்கள் என்றால் அதற்கு உண்டான விளைவுகளை அந்த படம் கண்டிப்பாக கொடுத்து விடும்.
அதனால், புது படம் எடுக்கும்போது இருக்கும் கவனத்தை விட கூடுதல் கவனம் படங்களை ரீமேக் செய்யும் பொழுது இருக்க வேண்டும் என பேசி இருக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.